உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் 16

வாகக் கொள்ளப்பட்டமை “மிழலை நாட்டு நரியெல்லாம், அழைத்துத் தெருட்டி” என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடலால்(28-11) நன்கு உணரப்படும். இம் மிழலைக் கூற்றம் நெய்தனிலத்தின்கண் உள்ளதென்பதற்கு “நெல்லரியும் இருந்தொழுவர், செஞ்ஞாயிற்று வெயின் முனையின், தெண்கடற்றிரை மிசைப்பாயுந்து” என்னும் புறப்பாட்டே (24)சான்றாதல் காண்க. நெய்தல் நிலமாவது கடலுங் கடல் சார்ந்த இடமுமே யாகலான், மிழலைக் கூற்றமும் அதன்கண் ஓர் ஊராகிய பெருந்ததுறையு மெல்லாம் கடற்கரையைச் சார்ந்திருந்த இடங்களே யாதல் ஐயுறவின்றி நாட்டப்படும்.

அற்றேற், பெருந்துறை ஒரு கடற்கரைப் பட்டினமாயின், அப் பட்டினத்தின்கட் குதிரை கொள்ளும் பொருட்டே அடிகள் சென்றனராயின் அதற்குச் செல்லும் வழி ஒன்றனையே பிடித்து அடிகளும் அவருடன் வந்தோரும் அதன்கட் செல்லல் வேண்டும். அவ்வாறன்றி அவர் வேறொரு வழி பிடித்துப் போயினாரென்றும், குதிரை கொள்ளச் சென்ற அவ்வழி தவறியே மற்றுமொருகிளைவழியாற் பெருந்துறைக்கட் சென்றார் என்றும்

பொருள்பட,

"என்றும்உள பொன்றும் உடல் என்னும் நகர்தோறுஞ் சென்றவழி மாறி யொரு தெய்வவழி செல்வார். நன்றி புள முத்திபெற நம்பர்தம தன்பால்

அன்றுயர் பெருந்துறை அடைந்தபடி சொல்வாம்’

وو

எனக் கடவுண் மாமுனிவர் அருளிச் செய்த திருவாதவூரடிகள் புராணங் கூறுதல் என்னையெனின்; அடிகள் குதிரை கொள்ளச் சென்றது திருப்பெருந்துறை நகரத்திலன்றி அதனை யடுத்துள்ள கடற் கரையிலேயாம். இஃது எற்றாற் பெறுது மெனின் “தாதகி மார்பன் நெடும்புவி சார் தரும் ஆழ்கடலின் கரை தீதிலாமாதுரகங்கொடு சீர்கெழும் ஆரியர் வந்தனர்” என அப் புராணத்தின்கண் முன்னே சொல்லப்பட்டமையாற் பெறுதும் என்பது. எனவே, திருப்பெருந்துறை நகரத்தை அடுத்திருந்த கடற்கரையில் ஆரியர் கொண்டுவந்து இறக்கித் தங்கிய குதிரைகளை விலை கொள்ளும் பொருட்டு அக் கடற்கரைக்குச் செல்லும் வழியே சென்ற அடிகள், திருப்பெருந் துறை யணுகியதும் அவ் வழியைத் தப்பி, அந் நகரத்திற்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/247&oldid=1584002" இலிருந்து மீள்விக்கப்பட்டது