உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கருத்தோவியம்

223

செல்லும் வழியே திருவருளாற் சென்றன ரென்பதே அப் பாட்டிற்குக் கருத்தாமென்று பகுத்துணர்ந்து கொள்க.

அவ்வாறாயின், திருவாசகத்திற் 'கோகழி' என்னும் பெயரை விடப் ‘பெருந்துறை' என்னும் பெயரே பெரு வரவிற்றாய் வழங்கக் காண்டுமா லெனின், அடிகள் காலத்திற் கோகழி' என்னும் பெயர் வழக்கம் அருகிப் பெருந்துறை என்னும் பெயர் வழக்கம் பெருகி வந்தமையின் முன்னையது சிறுபான்மையாயும் பின்னையது பெரும் பான்மையாயும் அதன்கண் வழங்கப்படலாயின வென்று உணர்ந்து கொள்க. என்று இதுகாறும் விளக்கிய வாற்றாற் ‘கோகழி' என்பதற்குத் திருவாவடுதுறை எனப் பொருளுரைத்தல் ஒருவாற்றானும் பொருந்தாதா மென்பதும், பெருந்துறை எனப் பொருள் கோடலே எவ்வாற்றானும் பொருத்தமா பொருத்தமா மென்பதுங் கடைப்பிடிக்க.

பாணபத்திரரும் சேரனும்

"இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன் காண்க

L

எனப் போந்த திருவண்டப் பகுதியடிகளுக்கு உரையெழுதிய வழி ‘அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன்' என்பது இறைவன் பாணபத்திரர் பொருட்டுச் சாதாரி பாடின திருவிளையா லை உணர்த்துகின்றதெனக் குறித்துப் போந்தாம். மாணிக்க வாசகப் பெருமான் சமயாசிரியர் ஏனை மூவர்க்கும் முன்னிருந்த வராகலிற், சுந்தரமூர்த்தி நாயனார் தோழராகிய சேரமான் பெருமாள் காலத்தவரான பாண பத்திரர் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலை அவர் குறித்தருளினாரென்றல் பொருந்தாதென நம்பால் அன்புள்ள நண்பர் ஒருவர் நமக்குக் கடிதம் வாயிலாய் நேரே எழுதித் தெரிவிக்கலானார். இவர்க்கு இது மாறுபாடாய்க் காணப்பட்டது போலவே, ஏனைச் சிலர்க்குங் காணப் படுமாதலால் எல்லார்க்கும் பயன்படுதற் பொருட்டு அவர் நிகழ்த்திய தடை பொருந்தாதென்பதும், யாங்கூறியதே பொருத்தமா மென்பதும் ஈண்டு ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/248&oldid=1584003" இலிருந்து மீள்விக்கப்பட்டது