உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

L

கூடல்”

❖ LDM MLDMELD -16 →

பாணபத்திரர் இறைவன்பால் “மதிமலி புரிசை மாடக் என்னுந் திருமுகம் பெற்றுச் சென்றது ஒரு சேரமன்னனிடத்து என்றதேயன்றி, அச் சேரன் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழன் என்று பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளைய டல் கூறுகின்றிலது. காரைக்காலம்மை யாரையும், அவர்க்கு முன்னிருந்த அடியார் சிலரையும், பழைய திருவிளையாடல்கள் சிலவற்றையும் எடுத்துக் கூறுமாறு போலத் திருநாவுக்கரசுகள் திருஞான சம்பந்தர் சுந்தரமூர்த்தி கள் முதலான ஆசிரியரையாதல், இறைவன் அவர் பொருட்டு நிகழ்த்திய அற்புதங்களை யாதல் ஒரு சிறிதும் எடுத்து ஓதாமையால் அப்பர் காலத்திற்கும் முற்பட்டதாகக் காணப் படும் கல்லாடம் என்னும் நூலிற்,

66

“குடக்கோச் சேரன் கிடைத்திது காண்கென மதிமலிபுரிசைத் திருமுகங்கூறி

அன்புருத் தரித்த இன்பிசைப் பாணன் பெறநிதி கொடுக்கென உறவிடுத் தருளிய மாதவர் வழுத்துங் கூடற் கிறைவன்"

(கல்லாடம் 15)

எனப் பாணபத்திரர் பொருட்டு இறைவன் சேரமன்னற்குத் திருமுகங்கொடுத்தமை குறிக்கப்பட்டிருத்தலால், அத் திருமுகம் பெற்ற சேரன் கல்லாடநூலுக்குப் பிற்காலத்திருந்த சுந்தர மூர்த்திகள் தோழரான சேரமான் பெருமாள் அல்லன் என்பது தெற்றெனப் புலப்படும்.

இனித் திருஞான சம்பந்தப் பெருமானும் திருவாலவாயில் அருளிச் செய்த “ஆலநீழ லுகந்த என்னுந் திருவியமகப் பதிகத்தில் "நக்க மேகுவர்” என்னுஞ் செய்யுளில் “தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே என்று பாணபத்திரர் பொருட்டு இறைவன் இசைபாடினமை அறிவுறுத்தருளினார். 'தாரம்' என்பது குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழிசையுள் முதற்றோன்றும் இசையாகும். "இக் குரன் முதலேழினும் முற்றோன்றியது தாரம்” என்றார் அடியார்க்கு நல்லாரும் (சிலப்பதிகாரம் வேனிற்காதை, 32). ஈண்டுத் தாரம் என்பது ஆகுபெயரால் அதனையுடைய ய சாதாரியிசையினை உணர்த்திற்று. திருஞான சம்பந்தப் பெருமான் மதுரைமா நகரில் அருளிச்செய்த இத் திருப்பதிகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/249&oldid=1584004" இலிருந்து மீள்விக்கப்பட்டது