உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

225

திற் குறிப்பிடப் பட்ட இது பாணபத்திரர் பொருட்டு இறைவன் சாதாரி பாடின திருவிளையாடலையுணர்த்துதலே முறையுடைத்து. இஃதிங்ஙனமாகவும், ஈண்டுக் குறிப்பிட்டது திருநீலகண்ட யாழ்ப்பாணரேயாம் என்பதுபடத் “திருவிய மகத்தினுள்ளுந் திருநீலகண்டப் பாணர்க், கருளியதிறமும் போற்றி' என்று பெரிய புராணத்துட் சொல்லப்பட்டது சிறிதும் பொருத்த மாகக் காணப்படவில்லை.

இறைவன் பாணபத்திரர் பொருட்டு இசை பாடின மயே பண்டை நூல்களிற் காணப்படுகின்றதன்றித், திருஞான சம்பந்தப் பெருமானோடு உடனிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருக்காக அங்ஙனம் செய்தாலின்பது யாண்டுங் காணப்பட வில்லை. மேலும் திருஞான சம்பந்தப் பெருமான் திருநீலகண்ட யாழ்ப்பாணரைச் சிறப்பித்துச் சொல்ல வேண்டினராயின், யாழ்ப்பாணர் பிறந்த திருஎருக்கத்தம் புலியூர்க்கு அவரோடு கூடிச்சென்று இறைவனைப் பாடிய திருப்பதிகத்தில் அவரைப்பற்றிச் சொல்லி யிருக்கவேண்டும். பருமான் திருச்செங்காட்டங் குடிக்குச் சென்றபோது,அவ்வூரிற் பிறந்தவராய் இறைவற்குப் பணி செய்த சிறுத்தொண்டரோடு அளவளாகி, அவரைச் சிறப்பித்துச் “செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய' என்று தமது திருப்பதிகத்துள் தியருளியவாறு போலத், திருவெருக்கத்தம்புலியூர்க்குச் சென்ற காலத்துத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைக் குறிப்பிட்டி ருத்தல் வேண்டும். அவரை அங்கே குறிப்பிடாமல், மதுரைமா நகர்க்குச்சென்று அங்கே அருளிச் செய்த திருப்பதிகத்திற் குறிப்பிட்டாரென்றல் ஒரு சிறிதும் பொருத்தமாகக் காணப் படவில்லை. பாணபத்திரர்க்காக இறைவன் இசைபாடிய திருவிளையாடல் மதுரையில் நிகழ்ந்த தொன்றாகையால், மதுரையிற் றிருப்பதிகங் கட்டளையிடும் திருஞான சம்பந்தப் பெருமான் அதனை நினைந்து பாடினாரென்றலே பொருத்த முடைத்தாம் என்க.

இன்னும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருக் கோளிலி என்னும் ஊர்க்குச் சென்று கட்டளையிட்டருளிய திருப்பதிகத் துள்ளும் ‘நாணமுடை வேதியனும்' என்னுஞ் செய்யுளிற் ‘பாணன் சை L பத்திமையாற் பாடுதலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/250&oldid=1584005" இலிருந்து மீள்விக்கப்பட்டது