உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

245

அம்மையையுமன்றி வேறெத் தெய்வத்தையும் நினையாது கொல்லா அறத்தையே விழுமிதாக் கொண்டு நிலவிய நம் சைவசமய ஆசிரியன்மார் தம் அருட்டிருமொழிகளாற் புகழ்ந்தெடுத்துக் கூறியவை தமிழ்நான்மறைகளையா மென்றும், அம் மறைகள் பண்டைத் தமிழ்நாடு கடல் கொண்டகாலத்து உடன்மறைந்துபோயினும், அவற்றிற் கூறிய மெய்ப்பொருள் களை ‘தொல்காப்பியம்' திருக்குறள்' ‘திருமந்திரம்', தேவார திருவாசகம், 'சிவஞானபோதம்' முதலிய ஒப்புயர்வில்லா நூல்களில் நிலைபெற்றுக் கிடக் கின்றன வென்றும் எமது திருவாசக விரிவுரை’யில் நன்கெடுத்து விளக்கினேம்.

அவ்வுரையிற்கண்ட அவ்வாராய்ச்சி முடிபு பொருந் துமா, பொருந்தாதா என்று தெளியவேண்டின், ஆரியமொழி யிலுள்ள இருக்குவேதத்தையும் தமிழில் உள்ள மேற்காட்டிய நூல்களையும் ஒப்பிட்டுப்பார்த்து எப்பொருள் விழுமிதென நடுநின்று தேர்ந்து தெளிதல்வேண்டும். அங்ஙனம் தெளிதற் குரிய நன்முறையினை விடுத்து, ‘தேவார திருவாசகம் முதலான தமிழ்நூல்களில்' 'வேதம்’, 'மறை' இருக்கு' என்னுஞ் சொற்கள் வரும் சொற்றெடர்களைப் பொறுக்கிச் சேர்த்து, இத்துணைச் சொற்றொடர்களும் 'இருக்கு' முதலான ஆரிய வேதங்களையே குறிக்கின்றனவென்றும், இவ்வாறு நம் ஆசிரியர்களாற் புகழ்ந்து ஏத்தப்படும் அவ்வாரிய வேதங்களைப் பழித்தல் நம் ஆசிரியர்களையே பழித்துச் சைவசமய வரம்பை அழித்தலே யாகுமென்றும் ஒரு சிற்றுரைஎழுதி, அதற்கு மற்றொரு தமிழ்ப்புலவர்பாற் புகழ்ச்சியுரை ஒன்றும் வாங்கிச் சேர்த்து நண்பர் ஒருவர் சென்ற ஆண்டு ஒரு சிறு சுவடி வெளியிட்டனர். இந் நண்பரைப்போலவே இவர்க்கு முன்னும் இத்தகைய தடைகள் நிகழ்த்தினார் சிலர் உளர். அவர் நிகழ்த்திய அத் தடைகளுட் கருதிப் பார்க்கத்தக்கவற்றிற் கெல்லாம் விடைகள் எழுதி, அவ்வப்போது வெளிவந்த 'திருவாசக விரிவுரை' மேலேடுகளில் அவைதம்மை வெளியிடு வித்தேம். எடுத்த பொருளை ஆராய்ந்து பார்த்தல் விடுத்து வீணே எம்மேல் வசைமொழிகளை வாரியிறைத்தார் தம் புல்லிய உரைகளை ‘அவ்வளவில் அவன் மகிழுக' என்னும் நயமேபற்றி, எம்முடைய நன்முயற்சியையுங் காலத்தையும் வறிதே கழிக்க மனம் ஒருப்படாமையிற் பொருட்படுத்தாது விட்டேம். இனி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/270&oldid=1584029" இலிருந்து மீள்விக்கப்பட்டது