உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

5. திருவாசக “மூவாநான்மறைச்” சொற்றொடர் விரிவுரைமேல் எழுந்த ஆராய்ச்சி

66

மூவா

திருவாசக போற்றித் திருவகவலிற் போந்த நான்மறை" என்னுஞ் என்னுஞ் சொற்றொடராற் குறிக்கப்பட்டவை, இஞ்ஞான்று 'வேதங்கள்' என்னும் பெயரால் வழங்கப்பட்டு வரும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் ஆரிய மொழி நூல்களா, அன்றி அவற்றின் வேறான தமிழ்நூல்களா என ஆராய்ந்து ஆரிய மொழி நூல்கள் எல்லாவற்றிற்கும் முற்பட்டதாகிய இருக்கு வேதத்தில் தமிழ்ச் சான்றோர் இலைமறைக்காய் போற் சேர்த்துவைத்த உருத்திர வழிபாடு ஒன்றைத் தவிரப், பெரும்பான்மையான அதன் மற்றப் பகுதிகளெல்லாம் இந்திரன் வருணன் மித்திரன் என்னுஞ் சிறு தெய்வ வழிபாடும், அத் தெய்வங்கள் பொருட்டு ஆடு மாடு குதிரை, மக்கள் முதலியோரைக் கொன்று சோமப் பூண்டின் சாறாகிய கள்ளைத் தொட்டி தொட்டியாய் வைத்து வேட்டு அவ்வூனையுங் கள்ளையும் அருந்தி வெறியாடுதற்கு ஏதுவாகிய வேள்விகளும் மலிந்து கிடக்கக் காண்டலின், ஆரியர்க்கே உரியனவாகிய அவ் வேதப் பகுதிகளின் வழியே அவற்றின் பிற்றோன்றிய அந்நூல்கள் வெறும் பூசாரிப் பாட்டுகளேயாகும் அல்லாமற், சிவபிரானால் அருளிச் செய்யப்படுந் தகுதிப்பாடு உடையன அல்ல அல்ல என்றும், சிவபிரானால் உண்மையில் அருளிச்செய்யப்பட்டவை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பெரும்பொருள்களை அறிவுறுத்திக், கொலை குடி முதலான பெரும் பாவங்களிற் செல்லாமல் மக்களைத் தடைசெய்து அவரைப் புனிதராக்கி அவரை வீடுபேற்றின்கண் உய்க்குந் திறத்தவாய்ப் பண்டை நாளிலிருந்த தமிழ்நான்மறை களேயா மென்றும், முழுமுதற் கடவுளான சிவபிரானையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/269&oldid=1584028" இலிருந்து மீள்விக்கப்பட்டது