உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

243

அகழ்ந்தெடுத்துக்கொண்டுபோக விழைந்து, தனது கரத்தால் அகழ அகழக் கோயிலின் அடி காணப்படாமற் கீழே நிலத்தினுள் ஊடுருவிக் கொண்டு செல்லக் கண்டு வியந்து, முன்னிருந்தபடியே வைத்து வழிபாடாற்றினன் என்பது. இங்ஙனம் சிவபெருமான் இங்கே இடம் நிலைபெற இருந்த காரணத்தாற் ‘கடம்பூர்’ தன்னில் இடம்பெற இருந்தும்' என்றருளிச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/268&oldid=1584027" இலிருந்து மீள்விக்கப்பட்டது