உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் 16

வ் வரலாற்றினை நேரே போய்த் தெரிந்தெழுதின அன்பர் குமாரசாமி யவர்கட்கு நாம் பெரிதுங் கடமைப் பட்டிருக்கின்றோம். அன்பர் சாம்பசிவம் பிள்ளை யவர்கள் தெரிவித்த வரலாற்றிற்கும் இதற்கும் சிற்சில வேறு பாடுகள் இருப்பினும், இரண்டும் பெரும்பாலும் ஒத்திருத்தலிற் “கோ ஆர் கோலம்” என்பதற்கு ‘ஆவின்றன்மை நிறைந்த கோலத்தினை' என உரைத்து உரையைத் திருத்திக்கொள்க.

‘புறம்பயமதனில் அறம்பல அருளியும்’

என்பதன் குறிப்பு

சிவ

சென்னைக் கல்யாணராம ஐயர் புத்தக சாலையில் எழுத்தாளரான ஸ்ரீமான் ரா. மகாலிங்கம் அவர்கள் பலரை உசாவியும், பல நூல்களைப் பார்த்தும், கல்வெட்டுகளை ஆராய்ந்தும் குருமுயற்சியோடு எமக்கு எழுதிய தலக்குறிப்புகளுள் திருப்புறம் பயத்தைப் பற்றிய குறிப்பும், திருக்கடம்பூரைப் பற்றிய குறிப்பும் மாணிக்கவாசகப் பெருமான் குறித்தருளிய வரலாற்றினை வரலாற்றினை விளக்குதலின் அவற்றை இங்கே வரைகின்றாம். இக் குறிப்புகளை மிக வருந்தித் தேடி நமக்குத் தெரிவித்த ஸ்ரீமான் மகாலிங்கம் அவர்கட்கு யாம் பெரிதுங் கடமைப்பட்டிருக்கின்றேம்.

சிவபெருமான் தட்சணாமூர்த்தி யுருவாய்த் தோன்றிச்

சநகர் முதலான முனிவரர் நால்வர்க்கும் அற

நூற்

பொருள்களை அறிவுறுத்த காரணத்தால் 'புறம்பயமதனில் அறம்பல அருளியும்' என்று அருளிச் செய்தார். புறம்பயஞ் சந்நிதிக்குக் கிழக்கேயுள்ள திருக்குளத்தின் கரைமேல் எழுந்தருளி யிருக்கும் குருமூர்த்தமே அவ்வுபதேச மூர்த்தியா யிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

“கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்’ என்பதன் குறிப்பு

திருக்கடம்பூர் என்னுந் தலம் இக் காலத்தில் 'மேலைக்கடவூர் என வழங்கி வருகின்றது. அங்கே இந்திரன் சிவபெருமானை வழிபட்டுத், தனக்கெழுந்த அன்பின் மேலீட்டாற் சிவலிங்கப் பெருமானைக் கோயிலோடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/267&oldid=1584026" இலிருந்து மீள்விக்கப்பட்டது