உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

பண்டைக்காலத்தனவான,

241

அவ்விடத்திற்குத் ‘தீவு' எனும் பெயர் வழங்கியதின்றென எல்லாரும் தெரிவிக்கின்றனர். தேவூர்ச் சிவாலயம் அதனைச் சூழ்ந்த தெருக்கள் எல்லாவற்றிற்கும் தென்கீழ்த் திசையில் அரைக்காலே அரைவீசம் மைல் தொலைவிற் கிழக்கு நோக்கிய செங்கல் மண்டபங்கள் இருக்கின்றன. அம்மண்டபங்களுக்குத் தென்கீழ்த் திசையில் ஓர் இன்சுவைத் தெண்ணீர்த் தடாகமும், தென்மேற் புறங்களில் தென்னை, இருப்பை முதலான பல மரங்கள் அடர்ந்த தோப்புகளும், வட கீழ்ப்புறங்களில் நன்செய் வயல்களும் சூழ்ந்திருக்கின்றன. அம்

மண்டபங்களின்

ஒன்றிலுள்ள தென்புறச் சுவரில் ஏறக்குறைய நான்கடி நீளமும், இரண்டரையடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் இடபம் ஊர்ந்த அம்மையப்பர் வடிவும், ஒரு சிவலிங்க வடிவும், ஒரு முனிவரர் அவர் தம் மனைவியார் வடிவும், இறந்து பட்ட ஒரு பசுவின் வடிவும், உயிரோடு கூடிய பசு ஒன்று ஒரு கன்றிற்குப் பால் கொடுக்கும் வடிவும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு இப்போது ‘பசுபதீசுவரர்க் கோயில்' என்னும் பெயர் வழங்கி வருகிறது. ஏறக்குறையப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்க்கூடத் தடாகத்தின் தென்கரையிற் பத்து வீடுகள் இருந்தன என்று சொல்லுகின்றனர். ஆனால், இப்போது அவ் வீடுகள் சிதைவுற்றிருக்கின்றன.

.

.

அங்கே தவஞ் செய்துவந்த முனிவரர் ஒருவர் ஏதோ சாபம் தீரவேண்டிய பலவகைப்பட்ட உயர்ந்த பசுக்களே ஏராளமாக வைத்துப் பாதுகாத்துக்கொண்டு, சிவபிரானிடத்து மிக்க அன்புடையராய் ஒழுகினர். அப் பசுக்களில் ஒன்று கன்று ஈன்ற சின்னாட்களில் இறந்துபட்டது. அப்போது அம் முனிவரர் உளம் நைந்துருக, இறைவன் திருவுளம் இரங்கி அப் பசுவின் உருவெடுத்துக் கன்றுக்குப் பால்கொடுத்து அம் முனிவரர் சாபமுந் தீர்த்து, அம் முனிவரர் அவர் மனைவியார் இறந்த பசு அதன் கன்று முதலிய எல்லார்க்கும் வீடுபேறு அளித்ததருளினார்.

எல்லாரும் இவ் வரலாற்றை இங்ஙனமே கூறுகின்றனர். ஆனால், அம் முனிவரருக்கு மகவு ஒன்றிருந்ததென எவருமே சொல்லவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/266&oldid=1584025" இலிருந்து மீள்விக்கப்பட்டது