உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

வ்

மறைமலையம் 16

வ் வரலாற்றை நமக்காக அன்புகூர்ந்து தெரிந்தெழுகிய சாம்பசிவம்பிள்ளை யாம் பெரிதும் நன்றி

யவர்கட்கு

பாராட்டுங் கடப்பாடுடையோம்.

வ்

இங்ஙனமே கல்லாடம், பஞ்சப்பள்ளி, நந்தம்பாடி, வேலம்புத் தூர், சாந்தம்புத்தூர், வெண்காடு, பாண்டூர், திருவாரூர், திருவிடை மருது, திருவாஞ்சியம், கடம்பூர், ஈங்கோய்மலை, துருத்தி, திருப்பனையூர், கழுமலம், புறம்பயம், குற்றலாம், சந்திரதீபம் முதலான தலங்களில் நிகழ்ந்தனவாகத் திருவாதவூரடிகள் குறித்தருளிய நிகழ்ச்சிகளும் ஆங்காங்குள்ள அன்பர்கள் நன்காராய்ந்து தெரிந்து நமக்குத் தெரிவிப்பர் களாயின் அவர்க்கெல்லாம் நமது கடமைப் பாட்டினைத் தெரிவிப்பேம். திருவாதவூரடிகள் திருவடிக்கும், சிவபெருமான் திருவடிக்கும், சைவசித்தாந்தந்திற்கும் ஒன்றுக்கும் பற்றாதயாம் செய்தற்கு எடுத்துக்கொண்ட இவ் விரிவுரைத் தொண்டானது இனிது நிறைவேறும் வண்ணம் எமக்குப் பலவகையாலும் உதவி புரியும் மெய்யன்பர்களின் உதவியே எஞ்ஞான்றும் மேம்பட்டு விளங்கும். தாமும் இங்ஙனஞ் செய்ய மாட்டாது அது செய்யும் பிறரையும் அதுசெய்ய வொட்டாது இகழ்ந்து இகழ்ந்து தூற்றித் திரியும் ஏனையோர் செயல் அவர் தமக்கே தீதாய் முடிந்து மறைந்து போமென்பது திண்ணம். நம்மைத் தூற்றித்திரிவார் பொய்யுரைகளால் ஏனையோர் மயங்காமைப் பொருட்டு உண்மையை ஊக்கத்தோடு காட்டிவரும் யாழ்ப்பாணத்துச் சட்டநூல் வல்ல சைவத்திருவாளர் K.S. கனகராயர்க்கும் அவரைச் சார்ந்த நன்பர்க்கும் யாம் பெரிதும் நன்றி கூறுகின்றோம்.

நாகபட்டினத்திற்கு அருகேயுள்ள அந்தணப்பேட்டைச் 'சன்மார்க்க சங்கத்’ துக் காரியதரிசி சைவத் திருவாளர். அ கு..குமாரசாமி அவர்கள் நம் பொருட்டுத் தேவூர்க்குச் சென்று அதன் தென்பால் உள்ள இடவரலாற்றைக் கற்றார் கல்லாதாரில் ஆண்டில் மிக முதிர்ந்த பலரிடத்துங் கேட்டும், தாமே அவ்விடத்திலுள்ள மண்டபங்களைப் பார்த்தும் பின் வருமாறு நமக்கு எழுதித் தெரிவிக்கிறார்:

66

தாங்கள் ‘செந்தமிழ்க் களஞ்சியத்’தின் 6-ஆம் பகுதியிற் குறித்துள்ளவை பெரும்பாலும் உண்மையே. உண்மையே. எனினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/265&oldid=1584023" இலிருந்து மீள்விக்கப்பட்டது