உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

4. “தேவூர்த்தென்பால் திகழ்தரு தீவைப்” பற்றிய ஒரு குறிப்பு

திருநாகைக்கு அணித்தாயுள்ள கீழ்வேளுர்க்குத் தெற்கே திருத்தேவூர் என்னும் ஒரு சிவதலம் இருக்கின்றது. அத்தேவூருக்குத் தென்பக்கத்தே நாற்புறமும் நன்செய் வயலானும் நீரானுஞ் சூழப்பட்டு நடுவே உயர்ந்த ஒரு மண்மேடு அப்பக்கத்துள்ளவர்களால் தீவு என்று பெயரிடப்பட்டு நிற்கின்றது. அத் தீவின்கட் பழைய கல்மண்ட கல்மண்டபங்களும் இருக்கின்றன. சிவபெருமானிடத்து அன்புமிக்க ஒரு முனிவரர் தம் மனைவியோடும் அத் தீவின்கட் பண்டொரு காலத்தில் உறைந்து வந்தனர். அவர் தமது குழந்தைக்கும் பூசனைக்கும் பயன்படும் பொருட்டுக் கன்று ஈன்ற ஓர் ஆவினை வளர்த்து வந்தனர் அவ் ஆ சில நாட்களின்பின் சடுதியில் இறந்துபடப், பாலின்மையால் தமது பூசனை நடைபெறாததோடு, கன்றுங் குழந்தையும் பசிபெறாமல் மிக வருந்துதல்கண்டு, அம் முனிவரர் உளம்நைந்து சிவபெருமானை நினைந்து உருகினர். உருகினர். அவ் வடியவர் துயர்பொறாத ஆண்டவன் உடனே அவ் ஆவின் வடிவெடுத்து அங்குள்ள துயர்நீக்கினர். இந்நிகழ்ச்சியைக் கல்வடிவில் அமைத்து அத் தீவின்கண் வைத்திருக்கின்றனராம்.

இந் நிகழ்ச்சியை நமக்கு அன்புகூர்ந்து தெரிவித்தவர் திருச்சிராப்பள்ளியிற் கல்வி கேள்விகளிற் சிறந்த சிவனடியா ராய் விளங்கும் சைவத்திருவாளர் தி. சாம்பசிவம்பிள்ளை யவர்களேயாம். இவர்கள் தெரிவித்த இவ்வரலாற்றைத் தேவூரிலா யினும் அதற்கு அருகிலாயினும் உள்ள அன்பர்கள் ஆராய்ந்தறிந்து அதன் உண்மையை உறுதிப்படுத்துவார் களாயின் அதனைத் திருவாசக விரிவுரையிற் சேர்த்துக் கொண்டு அவர் கட்கு எமது கடமையினைத் தெரிவிப்பேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/264&oldid=1584022" இலிருந்து மீள்விக்கப்பட்டது