உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் 16

நெஞ்சமுடையோனே, நீ பிப்ருவின் கோட்டைகளைத் தகர்த்துத் தாசர்களைக் கொன்று வீழ்த்தினபோது ரிஜிஸ் வானுக்கு உதவி புரிந்தாய்” என்னும் ஐந்தாம் பாட்டினாலும் “வலிமையிற் சிறந்த அற்புதங்களையும் நீ நின் அடிக்கீழ் இட்டு மிதித்தாய்” என்னும் ஆறாம் பாட்டினாலும், “ஆரியரையும் தாசரையும் நீ நன்றாய்ப் பகுத்தறிவாயாக” என்னும் எட்டாம் பாட்டினாலும், "சுஷ்ணா சுஷ்ணா என்பவனுடைய உறுதியாய்க் கட்டப்பட்ட கோட்டைகளை அவர் துண்டு துண்டாகப் பிளந்தெறிந்தான்” என்னும் பதினோராம் பாட்டினாலும் நன்கு தெளியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/263&oldid=1584021" இலிருந்து மீள்விக்கப்பட்டது