உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

237

மகிழ்ச்சியோடு கூடிய மந்திரங்களும். தூய நினைவுகளும் மேல்நோக்கி எழுக' எனவும் போந்தவைகளையும், இன்னும் இங்ஙனமே இருக்கு வேதத்தும் மற்றை வேதங்களினும் பலப்பலவாய்க் காணப்படும் சொற்றோடர்களையும் உற்று நோக்கவல்ல நடுநிலையாளர்க்கு இவ் ஆரிய வேதங்கள் மக்கள் வாய்மொழியே யாகுமல்லது கடவுள் வாய்மொழியாதல் தினையளவுமாகாதென்பது தெற்றெனப் புலப்படும்.

இவ் வேதப்பாட்டுகளைப் பாடிய ஆரியமக்கள் இவ் இந்திய நாட்டுக்குப் புறம்பேயுள்ள வடநாடுகளிலிருந்து போந்து, இந்தியாவிற் குடியேறின ரென்பதும், அவர் வருவதற்குமுன் இந்தியாநாடெங்குமிருந்த தமிழ்மக்கள் நாகரிகத்தில் மிகச் சிறந்தவராயிருந்தமையின் அவரோடெ திர்த்துப் போராடமாட்டாமல் ஆரியர் மிகவருந்தித் தாம் வழிபட்ட இந்திரன்' என்னும் ஒரு சிறு தெய்வத்தைப் பெரிதாகக் கருதி அதன் றுணையைப் பெரிதும் நாடி வேண்டினரென்பதும், தமக்கு மாறாயிருந்த தமிழ்மக்களைப் பெரிதும் இகழ்ந்து அவர்களைத் தாசர் என்றும் அசுரர் என்றும் வழங்கினாரென்பதும் இருக்குவேதத்தை ஒரு முறை படித்துப் பார்ப்பவர்க்கும் இனிது விளங்கா நிற்கும். பண்டைநாளிலிருந்த தமிழர்கள் சொல்வளமும் அரசியல் வலிமையும் பேராண்மையும் மிகுதியும் உடையரா யிருந்தமை யும், உயிர்களைக் கொன்று செய்யும் வேள்விகட்குப் பகைவரானமையும் பற்றி ஆரியர் அவரை இகழ்ந்துரைத்தல் இருக்குவேத முதல்மண்டிலத்து முப்பத்து மூன்றாஞ் சூக்தத்து 'இந்திரனே, நீ செல்வத்தாற் சிறந்த தாசர்களை நினது படைக்கலத்தாற் கொன்று, உனக்கு உதவியாய் இருப்பவரோடு உடன் செல்கின்றாய்! வேள்வி செய்யாத அப் பழையோர் வானிடத்திற்கு மிகச்சேயராய்ப் பலமுகமாகச் சென்று அழிந்து படுகின்றனர்.' என்னும் நான்காம் பாட்டினாலும், ‘பொன்னாலும் மணிக்கலன்களாலும் வரிசை வரிசையாக ஒப்பனை செய்யப் பட்டோராய் அத் தாசர்கள் இந்நிலம் முழுதும் ஒரு மறைப் பினை விரித்தார்கள்' என்னும் எட்டாம் பாட்டினாலும், இலிபிசனுக்கு உரிய வலிய கோட்டைகளை யெல்லாம் இந்திரன் இடித்துத் தகர்த்தான்' என்னும் பன்னிரண்டாம் பாட்டினாலும், ஐம்பத்தோராம் சூக்தத்திலுள்ள ‘ஆண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/262&oldid=1584020" இலிருந்து மீள்விக்கப்பட்டது