உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

❖ LDM MLDMELD -16 →

இப்பதிகத்தால் வழுத்தப்படும் கடவுள் உருத்திரராகவும் வழுத்துவோர் ஒரு முனிவராகவும் அல்லவோ இருக்கக் காண்கின்றோம்? இப் பதிகத்தினை இயற்றிய முனிவர் பெயர் இதன்கட் குறிக்கப்பட்டிருக்கவும் இதனை விடுத்து, இது கடவுள் வாய்மொழி என்று கூறினால் கடவுள் தம்மைத்தாமே வணங்கி வாழ்த்திக் கொண்டாரென்றன்றோ கொள்ள வேண்டி வரும்? ஓராண்மகன் தனக்குள்ள குறைபாடுகளை அறிவித்து அவற்றை நீக்கிக் கொள்ளல் வேண்டி இறைவனை வழுத்திக்கூறும் இப் பதிகத்தினை ஆராய்ந்துகாணும் அறிவுடையார் கடவுள் வாய்மொழி யென்று கூறுதற்கு முன் வருவரோ? குறை பாடுடைய மக்கள் வாய்மொழியைக் குறைபாடில்லாத இறைவன் வாய்மொழியாகப் போலி நம்பிக்கையால் துணிந்து கூறுதல் குற்றமோ, மக்கள் வாய்மொழியை மக்கள் வாய்மொழி யென்றே ஆராய்ந்து உண்மையை உள்ளவாறு கூறுதல் குற்றமோ என்பதை அன்பர்களே பகுத்தாராய்ந்து கொள்ளல் வேண்டும்.

இன்னும் இருக்குவேத முதன் மண்டிலத்தின் 63-வது சூக்தத்தின் கடைப்பாட்டில் அம் மந்திரங்கள் கோதமராற் செய்யப்பட்டன வென்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. அம் மண்டிலத்தின் 426-வது சூக்தத்தின் முதற்பாட்டில் ‘சிந்து நதிக்கரையிலிருக்கும் பாவ்ய மன்னனின் உண்மைப் புகழுரைகளாகிய இம் மந்திரங்களை நினக்குத் தருகின்றேன். ஏனென்றால்,வெல்லப்படாத அவ் வரசன் பெரும்புகழ் வேண்டி யிரம் வேள்விகளை எனக்குச் செய்யக் கொடுத்தான் எனவும், அதன் இரண்டாம் பாட்டில் ‘அவ்வரசனிடமிருந்து நூறு கழுத்தணிகளையும் நூறு போர்க் குதிரைகளையும் வேண்டிப்பெற்றுக் கொண்டேன். கக்ஷிவானாகிய யான் அத்தலைவனுடைய ஆயிரம் ஆக்களையும் அங்ஙனமே பெற்றேன்'. எனவும், அதன் 127-வது சூக்தத்தின் இரண்டாம் பாட்டில் ‘ஆங்கிரஸரில் மூத்தோராற் பாடப்பட்ட மந்திரங்களைக் கொண்டு நின்னை அழைக்கின்றோம்" எனவும், ஏழாம்பாட்டில் ‘வானைநோக்கி மந்திரங்களைப் பாடினோர் போலப் பிருகுக்களும் தங்களாற் பாடப்பட்ட மந்திரங்களையும் புகழுரைகளையுங் கொண்டு அவனை அழைத்தார்கள் எனவும் 123-வது சூக்தத்தின் ஆறாம்பாட்டில்

66

6

எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/261&oldid=1584019" இலிருந்து மீள்விக்கப்பட்டது