உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

235

1. "வலியராய் மிக்க ஈகையுடையோராய்ச் சிறந்த அறிவீனராய் இருக்கும் உருத்திரருக்கு அவர் உள்ளத்திற்கு மிக இனியதாக நாம் எதனைப் பாடுவோம்?

2. நம்மைச் சேர்ந்தோர்க்கும் நம்முடைய ஆக்களுக்கும் நம்முடைய எருதுகளுக்கும் நம்பின்னோர்க்கும் அதிதியானவன் உருத்திரரின் அருளை வழங்குதற் பொருட்டும்;

3. மித்திரரும் வருணரும் உருத்திரரும் எல்லாக் கடவுளரும் ஒரே உள்ளத்தினராய் எம்மை நினைவு கூர்தற் பொருட்டும்; 4. களிப்பினையும் நலத்தினையும் வலிமையினையும் பெறுதற் பொருட்டும் பாருட்டும் வேள்விகட்கும் வேள்விகட்கும் பாட்டுகட்கும் நோய்நீக்கும் மருந்துகட்கும் தலைவரான உருத்திரரை வேண்டிக் கொள்கின்றேம்.

5. நல்லவரும் கடவுளரிற் சிறந்தோருமான அவர் கதிரவனைப் போற் பேரொளியோடு விளங்குகிறார், விளக்கமான பொன்னைப் போல் அவர் மிகுந்த ஒளியுடைய வராய் இருக்கின்றார்.

6. பசுபதியான அவர் நம்முடைய போர்க்குதிரைகளுக்கு நலத்தினையும், நம்முடைய செம்மறிக் கிடாய்கள் கிடாரிகள், நம் ஆடவர் பெண்டிர் ஆக்கள் என்னும் இவர்கட்கு நல்வாழ்வி னையும் தந்தருள்வாராக.

7. ஓ! சோமரே, நூறு ஆடவர்க்குரிய மாட்சிமை யினையும் வலிமையிற் சிறந்த படைத் தலைவர்க்குரிய பெரும் புகழையும் எங்கள்மேல் வைத்தருள்க.

8. பிறர் தீய எண்ணங்களும் வருத்துவோரும் எம்மைத் தடை செய்யாதிருக்க. இந்துவே வலிமையில் எமக்கு ஒரு பங்கு கொடுத்தருள்க.

9. சோமரே, தலையையும் நடு இடத்தையும் காதல் கூர்ந்தருள்க; சோமரே, மூவாதவரான நும்மக்கள் தூயதான உயர்ந்த உலகத்தில் உமக்குத் தொண்டுசெய்யும்படி அறிந்தருள்க."

இந்தச் சூக்தத்தினைப் படித்துப்பார்ப்பவர் எவரேனும் தனைக் கடவுள் வாய்மொழியென்று கூற ஒருப்படுவரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/260&oldid=1584017" இலிருந்து மீள்விக்கப்பட்டது