உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கருத்தோவியம்

66

247

புத்தகசாலையுட் புகுந்த “கசினி” யின் மகமதிய அரசன் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஏட்டுச்சுவடிகளைக் கண்டு இவை யாவை?” என்று வினவ, இவை சைவசமய வ நூல்கள் என்று அங்குள்ளார் கூறியபோது, ‘எங்கள் குரானுக்கு மாறான பொருள்கள் அடங்கினவாயின் இவை இருத்தல் ஆகாது; குரானில் உள்ள பொருள்களே இவற்றிலும் இருப்பின் இவை இருத்தலும் மிகை; குரானில் இல்லாத பொருள் இவற்றுள் இருப்பின் அத்தகையனவும் இருத்தல் ஆகாது; ஆகையால் இவை தம்மைத் தீயிட்டுக் கொளுத்து!” என்றனானம். அம்மகமதிய அரசனிலும், இத் தமிழ்ப்புலவர் மிக நல்லவர். மிக்க இரக்கமுடையர். ஏனெனில், அவ்வரசன் தன்மதத்திற்கு இசை யாதவற்றைத் தீயிட்டுக் கொளுத்தச் சான்னான்; இப் புலவரோ சவ புராணங்களை நம்பாதவரைத் தீயிட்டுக் கொளுத்தச் சொல்லவில்லை. பிற மதத்திற்குப் போம்படிதானே இனிமையாக வற்புறுத்து கின்றார். இன்னும் “சிவதருமோத்தரம” எழுதினவரைக் காட்டினும் இத் தமிழ்ப் புலவர் மிக நல்லர். மிக்க இரக்க முடையவர். ஏனென்றால் சிவதரு மோத்திரம்” எழுதினவர் சைவநூற் பொருளை நிலநிறுத்தவல்ல ஒருவன் அது செய்யா மற் பிறவழியிற் செல்வானாயின் அவனைக் கொலை செய்து விடு, அஃது அறமேயல்லாமற், குற்றம் அன்று என்கின்றார். மற்று இத்தமிழ்ப் புலவரோ சைவபுராணங்கட்கு மாறாய்ப் பேசுவோரை அங்ஙனம் கொலை செய்யும்படி கற்பித்தாரா? இல்லையே, பிற மதத்திற்குத்தானே அவரைப் போகச் சொல் கின்றார்.

அதனால் இவர் மிக நல்லர். மிக்க இரக்கமுடையர். ஆனால், இவர் இவ்வளவு இரக்கங் காட்டுவதில் ஓர் இடைஞ்சல் இருக்கின்றது; யாதென்றாற், சிவதருமோத்தரம் இப் புலவரையொத்த சைவர்களால் முழுதும் சிறந்த நூலாகக் கைக் கொள்ளப்படுவது; அத்தகைய சிறந்த நூலோ சைவநூலுக்கு மாறாய்ப் போனவர்களைக் கொன்றுவிடும் படி வற்புறுத்திச் சொல்கின்றது. ஆனால், இந்தப் புலவரோ அத்தகையோரைப் பிற சமயத்திற்குப் போகும்படி மட்டுஞ் சொல்கின்றார்; இவர் தமது சைவநூலுக்கு மாறாய்ப் பேசுவதைக் கண்டு, இவரைவிட அதன்பால் நம்பிக்கை வைத்த மற்றொரு சைவர் இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/272&oldid=1584032" இலிருந்து மீள்விக்கப்பட்டது