உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் 16

புலவரைக் கொன்று விட வந்தால் என் செய்வது, எனது முதலில் அஞ்சினேம்; ஆனாலும் இப் புலவர் கூறும் “வெள்ளைப் பெரியார்" ஆளும் இவ்வரசாட்சியில் அங்ஙனம் ஒருவரையொருவர் கொலை செய்தல் கூடாமையால் இவரினும் நம்பிக்கையுடைய சைவர் இப் புலவரைக் கொல்லல் முடியாதென்று அச்சம் தவிர்ந்தேம். சிவஞான போத மாபாடியத்தை முதலில் அரைப்பகுதியாக வெளியிட்ட இந்தப் புலவர் இன்னும் நீண்ட காலம் இவ்வுலகத்தில் உயிர் வாழுமாறு சிவபிரான் அருள்புரிக. சிவதருமோத்தரத்திற்கு மாறாக இவர் இரக்கங் காட்டுவது பற்றி, இவரினுங் கடுஞ் சைவராவார் இவர்க்கு ஏதுந் தீங்கிழைக்க முந்தாது இருப்பராக.

இனி, அப் புகழ்ச்சியுரைகாரர், யாம் சைவநூல் வரம்பை அழிக்கின்றேம் என்று அடுத்தடுத்துக் கூறி, ஆற்றமைப் படுகின்றார். ‘சைவநூல்' என்று இவராற் கொள்ளப்பட்ட

வை யென்பது இவர்தம் புகழ்ச்சியுரையுள் விளங்கிற்றி வ லதேனும், ஆராய்ச்சியுரை காரார் எடுத்துக் காட்டியவைகளை யெல்லாம் இவர் சைவ நூல் என்று கொண்டமை உய்த்துணர் வார்க்கு விளங்கும். ஆராய்ச்சியுரை காரர் முதற்கண் ‘திரு மந்திரம்' 'தேவாரம்' முதலியவைகளை எடுத்துக்காட்டி அவைகளுட் புகழப்பட்டிருப்பன இஞ்ஞான்று இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வழங்கும் நால் வேதங்களேயா மென்று கூறுகின்றார். திருமந்திரம், தேவாரம் முதலிய நூல்களே எடுத்துக்காட்டினமட்டில் அவற்றிற்கட் சொல்லப்பட்டவை நம்மாற் பெரிதும் ஆராயற் பாலனவேயாம்.

தேவார திருவாசகங்களை அருளிச்செய்த ஆசிரியன்மார் தாம் பிற நூல்களை உயர்த்துப் பேசப்புகுந்தால் தமது கோட் பாட்டுக்கு இசைந்தவற்றையே உயர்த்துப் பேசுவார்களல் லாமல் அதற்கு முற்றும் மாறாவனவற்றை உயர்த்துப் பேசமாட்டார்கள். அவற்றை இழித்தே பேசுவார்கள். பௌத்த சமண சமய நூல்களில் அறவொழுக்க அருளொழுக்க வகைகளை விரித்து வற்புறுத்தும் சிறந்த பகுதிகள் மிக்கிருந்தும் அவற்றுட் சிவ வழிபாடு கூறப்படாமை பற்றி அவை தம்மை யெல்லாம் நம் ஆசிரியன்மார் இழித்துப் பேசவே கண்டாம். அறவொழுக்க அருளொழுக்க முறைகளை எடுத்து வலியுறுத்து தற்கண் பெளத்த சமண நூல்கள், இருக்குமுதலான ஆரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/273&oldid=1584033" இலிருந்து மீள்விக்கப்பட்டது