உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

249

நூல்களினும் பார்க்க எத்தனையோ மடங்கு சிறந்தனவென்பது அவ்விரண்டையும் நடு நின்றாராய்வார்க்கு விளங்காமற்

போகாது.

ரு

இனித் தேவர்கள் எல்லாரினும் மேற்பட்ட முழுமுதற் கடவுளே பிறப்பு இறப்பில்லாச் சிவபெருமானென்பது இவ்வாசிரியன்மாரெல்லார்க்கும் உரிய சிறந்த கோட்பாடாகும். அது விரைமலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் மூவராய முதலொருவன் என்று (திருமுதுகுன்றப்பதிகம், 1) திருஞான சம்பந்தப் பெருமானும், "மூவுருவின் முதலுருவாய் இரு நான்கான மூர்த்தியே என்று முப்பத்து மூவர், தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ் செம்பவளத்திருமேனிச் சிவனே” என்று (மறுமாற்றத் திருத்தாண்டகம் 9) திருநாவுக்கரசு நாயனாரும், 'மூவரின் முதலாயவன்றனை' என்று (திருநீடூர்ப் பதிகம், 5) சுந்தரமூர்த்தி நாயனாரும் 'தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தளிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன்' என்று (திருவாசகம், திருச்சதகம், 30) மாணிக்கவாசகப் பெருமானும் அருளிச்செய்த வாற்றால் நன்கு அறியப்படும். இங்ஙனம் முழுமுதற் கடவு ளென்று தம்மாற் கொள்ளப்பட்ட சிவபெருமானைத் தவிர னைத் தேவர்களெல்லாரும் பிறந்திருக்கும் உயிர்களை யல்லாமல் எத்திறத்தானு ம் கடவுளாகார் என்பதூஉம் அப்பெற்றியரான அத் தேவர்களை வணங்குதல் குற்றமாம் என்பதூஉம் தாம் சிவபெருமானையன்றி வேறு எத்தேவ ரையும் ஒருபொருட்படுத்தி வணங்குவதில்லை யென்பதூஉம் அவர்களால் நன்கு வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவை,

“செத்துச் செத்துப் பிறப்பதேதேவென்று பக்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ அத்தன் என்று அரியோடு பிரமனும் துத்தி யஞ்செய நின்றநற் சோதியே”

“நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/274&oldid=1584034" இலிருந்து மீள்விக்கப்பட்டது