உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் 16

“சென்று நாம் சிறுதெய்வஞ் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்"

என்று (பொது) திருநாவுக்கரசு நாயனாரும்,

66

"வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந் திருமாந்தில் லையுட் சிற்றம் பலமேய

கருமானு ரியாடைக் கறைசேர் கண்டத்தெம் பெருமான் கழல் அல்லாற் பேணா துள்ளமே

என்று (கோயில்) திருஞானசம்பந்தப்பெருமானும், “சுரும்பார் விண்டமலர் அவை தூவித் தூங்குகண்ணீர் அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன், விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற் கரும்பாருங் கழினிக் கழிப்பாலை மேயானே”

என்று (திருக்கழிப்பாலை) சுந்தரமூர்த்தி நாயனாரும், "கொள்ளேன் புரந்தரன் மால்அயன் வாழ்வு குடிகெடினும் நன்ளேன் நினதுஅடி யாரொடு அல் லால் நர கம்புகினும் எள்ளேன் திருவரு ளாலேஇருக்கப் பெறின்இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே" (திருச்சதகம்)

“புற்றில்வாளரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே”

று

என்று (அச்சப்பத்து) மாணிக்கவாசகப்பெருமானும் அருளிச் செய்த வாற்றாற் கண்டுகொள்க. அப்பருக்கு முற்பட்டவரான திருமூல நாயனாரும் நால்வரோடு ஒப்பவே.

66

'சிவனே டொக்குந்தெய்வம் தேடினும் இல்லை அவனெ டொப்பார்இங்கு யாவரும் இல்லை"

என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/275&oldid=1584035" இலிருந்து மீள்விக்கப்பட்டது