உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கருத்தோவியம்

“அவனே யொழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை

அவனன்றி மூவரால் ஆவதொன்று இல்லை அவனன்றி ஊர்புகும் ஆறு அறியேனே”

க்

251

என்றும் (திருமந்திரம், 5, 6) சிவபெருமானே முழுமுதற் கடவுளாதலே நன்கு வலியுறுத்து அருளிச் செய்தார். ஆகவே, சிவபெருமானையன்றி வேறு எத்தேவரையும் முழுமுதற் கடவுளாகக் கொள்ளாமையும், அவர் தம்மை வணங்காமையும் அவர் தம் வணக்கங்கூறும் நூல்களே ஒரு பொருட்படுத் தாமையும் இச் சைவசமய ஆசிரியன்மார்க்கு அரும்பெரும் ப்பாடாதல் நன்கு பெற்றாம். இவர் இக் கடப்பாட்டினின்று ஒரு தினைத்தனையும் வழுவாராயிருந்தமை அவர் அருளிச் செய்த திருப்பாட்டுக்களிற் சிவபெருமானை யன்றி அவர்வேறு எவ்வகைத் தேவரையும் எவ்வகையானும் வணங்காமையே உறுஞ்சான்றாம். இப்பெற்றியரான இவ்வாசிரியன் மார் ஒருநூலே உயர்த்துக் கூறப்புவராயின் அந்நூல் சிவபெருமான் ஒருவனது புகழையே விளக்குவதாயிருந்தாலன்றி வேறு எவ்வாற்றானும் அதனை உயர்த்துப்பேச ஒருப்படார் என்பது அவர் பாடிய திருப்பாட்டுக்களை ஒரு சிறிது நோக்குவார்க்கும் தெள்ளிதிற் புலனாம். ஓர் ஆசிரியன் ஆக்கிய ஒருநூலில் உள்ள சொல்லுக்குஞ் சொற்றொடர்க்கும் பொருள் செய்யப்புகுவார், முதற்கண் அவ்வாசிரியன் கருத்து இதுவென்று உறுதிப்படுத்திக் கொள்ளுதலே இன்றியமையாது செயற்பாலதாம். அவ்வாறு அவன் கருத்துறுதி பெறப் பட்டபின், அதற்கிணங்கவே அவன்மொழிந்த சொற்குஞ் சொற்றெடர்க்கும் பொருள் செய்தல் முறையாம். இம்முறை ஆசிரியர் நக்கீரனார், இளம்பூரணர், பேராசிரியர்முதலான எல்லா உரைகாரரானும் வற்புறுத்துரைக்கப்பட்டது. ஆதலின் 'மறை' 'வேதம்' இருக்கு, ‘சாமம்’, ‘ஆறங்கம்' முதலான சொற்கள் தேவாரம் திருவாசகம், திருமந்திரம் முதலான அவர் அருளிச்செய்த நூல்களில் அடுத்தடுத்து வருமாயின் அச்சொற்களாற் குறிக்கப்படும் நூல்கள் இவையென்று பொருள் செய்யுங்கால் அவர் கருத்துக்கு இசையப் பொருள் செய்யவேண்டுமே யல்லாமல், அவர் கருத்துக்கு மாறாகத் தாம் கருதிய பொருள்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/276&oldid=1584036" இலிருந்து மீள்விக்கப்பட்டது