உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் 16

அவற்றின்மேல் ஏற்றல் தலைக்குத் தக முடியமையாமல் முடிக்குத்தகத் தலையைச் சிதைத்து அமைத்தலாகவே முடியும்.

ஞ்ஞான்று இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வழங்கும் ஆரிய மொழி நூல்களில் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கும் வணக்கம் ஒன்றுமே சொல்லப் பட்டிருக்குமாயின், அப் பெருமான் ஒருவனையே எல்லாம் வல்ல இறைவனாகக் கொண்டு வழுத்தம் அவர்கள் ‘மறை’, 'வேதம்', 'இருக்கு’, சாமம்' முதலியவற்றால் உணர்த்துக் கருதியவை அவ்வாரிய மொழி நூல்களே யென்று பொருள் செய்தல் பொருத்தமாகும். மற்று அந்நூல்கள் சிவவணக்கங் கூறாமற் சிறுதெய்வ வணக்கங்களையே மிக்கெடுத்துக்

கூறுமாயின் “சென்று நாஞ்சிறுதெய்வஞ் சேர்வோம். அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றேம்” கொள்ளேன்புரந்தரன் மாலயன் வாழ்வு, குடிகெடினும்,

66

நள்ளேன் நினதடியாரொடல்லால்” என்றற்றொடக்கத்தனவாகக் கட்டுரைத்துச் சொல்லும் அவர்கள் அவ்வாரியச் சிறுதெய்வ நூல்களை உயர்த்துப் பேசினாரென்று கோடல் யாங்ஙனம் பொருந்தும்? பொருளால் ஒவ்வாத வெறுஞ் சொற்கள் ஒன்றையே கொண்டு ஆராயாது முடிபு கட்டுதல் எங்ஙனம் பொருந்தும்? மேலும், ஒவ்வொரு மொழியுள்ளும் ஒரு சொல்லே ஒ வாருகால் ஒவ்வொரு பொருளையுணர்த்தித் தான் தனித்து நின்றக்கால் முன்னர் உணர்த்திய பல பொருளுக்கும் இடனாய் நிற்றலை மொழியாராய்ச்சியுடையார் எல்லாரும் நன்கு உணர்வர்.

66

மறை”, என்னுஞ் சொல்லுக்குப் பொருள் "மறைத்து மொழி கிளவி”; அதாவது: முடிந்த பொருளை அது பெறுந்தகுதியுடையானுக்கு ஆசிரியன் மறைத்துச் சொல்லுஞ் சொல்லாகும். இது “திவாகரத்”தால் உணர்க. நம் ஆசிரியர்கள் இம் மறை என்னுஞ் சொல்லால் இருக்கு முதலிய ஆரிய மொழி நூல்களையே குறித்தனரென்று உரைப்பின், உயர்ந்த தகுதிப் பாடுடைய நன் மாணாக்கனுக்கு மறைவாய்ச் சொல்லுதற்குரிய முடிந்த மறைபொருள்களை அந்நூல்கள் இவ்விவ் விடங்களில் உடையனவென்று பகுத்துக் காட்டல் வேண்டும். "நமச்சி வாய” என்னும் விழுமிய சிவமந்திரம் எசுர் வேதத்தினிடையில் இருக்கக் காண்டுமாகலின், அஃதொன்றுமே யமையுமெனின்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/277&oldid=1584037" இலிருந்து மீள்விக்கப்பட்டது