உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

253

சிவபெருமானுக்கு வணக்கவுரைகள் பலப்பல சொல்லிக் காண்டு போதற்கிடையே “சிவனுக்கு வணக்கம்” என்னும் பொருளைத் தருமாறு அஃது ஆண்டுச் சொல்லப்பட்டிருக் கின்றதேயன்றி, வீட்டுநெறி கூறும் “திருமந்திரம்" முதலான சைவசித்தாந்த நூல்களில் அவ்வைந்தெழுத்தும் சிவன், அருள், உயிர், மறைப்பு, மலம் என்னும் ஐம்பொருள் இலக்கணங்களும், அவற்றின் முடிந்த நிலையும் உணர்த்துமாறு காட்டுதல் போல் எசுர்வேதங் காட்டாமையின், அது முடிந்த நிலையினை அறிவுறுத்தும் “மறை” யாதல் ஒருவாற்றானும் ஏலாது. மேலும், அவ்வெசுர் வேதத்தின்கண் உள்ள வணக்க வுரைகள் அவ்வளவும் சிற்றறிவுஞ் சில்வாழ்நாளும் உடைய மக்கள் தாம் நலம் பல பெறல் வேண்டிக் கூறும் இரப்புரைகளா யிருத்தலின் தம்மையெல்லாஞ் சிவபெருமான் செய்தானென்றல் பகுத்துணர்வில்லார் கூற்றாம்.

வை

வவ

அருளிச்

உயர்ந்த மெய்யுணர்வின் இயல்புகளையும், இறைவன் திருவருள் பெற்று வீட்டுநெறி தலைக்கூடு மாற்றினையும் எடுத்து அறிவுறுக்கும் நூலாயின், அதனை இறைவன் அருளிச் செய்தானென்றல் ஒருவாற்றான் ஒக்கும். அத்தன்மையவாம் விழுப்பொருள் ஒருசிறிதுமின்றிச், சிவபெருமானையும் ஏனைத் தேவர்களையும் வேண்டி மக்கள் இரந்துரைத்த வழுத்துரைகள் நிறைந்த எசுர் வேதத்தைச் சிவபிரான் அருளினன் என்றுரைப் பின், சிவபிரான் தன்னைத்தான் வணங்கிக் கொண்டமையோடு ஏனைச் சிறு தேவர்களையும் வணங்கி அவர்தம்மை யெல்லாம் வேண்டினான் என்பதுங் கொள்ளப்பட்டு, இத்து த்துணை இழிந்தவனுங் கடவுளோ?' என்று நகையாடுதற்கு இடஞ் செய்யுமாகலிற், பேரறிவாளரான நம் சமயாசிரியர் சிற்றறி னருஞ் சொல்லாத இச் சொல்லை மறந்துஞ் சொல்லா ரென்க. ஆதலின், எசுர்வேதம் சிவபிரான் அருளிச் செய்த தாவது யாங்ஙனமென மறுக்க. எல்லாம் வல்ல சிவபிரான் முழுமுதற் நன்மையை எவரும் மறுத்து ஏளனஞ் செய்தற்கு இட ஞ் செய்யும் எசுர் முதலான ஆரியமொழி நூல்களின் உண்மையை யாம் எடுத்துக் காட்டியதுதான் சைவநூல் வரம்பை அழிப்பதோ! அறிவுடையீர் கூறுமின்! எசுர் வேதம் அத்துணைச் சிறந்ததாயின் அதன் பெயரைச் சைவசமயாசிரியர் ஓரிடத்தேனுங் கூறாது விட்ட தென்னை? நடுவுநின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/278&oldid=1584039" இலிருந்து மீள்விக்கப்பட்டது