உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப

கருத்தோவியம்

255

சிவபிரான் ஒர் ஊரன் அல்லன்' என்று அப்பர் பாடியிருக்கின்றார். ஆனால், இருக்கு வேதத்தில் மழையை வேண்டிப் பாடிய பாடல்களைச் சிவபிரானே பாடினார் என்று நண்பர் தமது ஞானக்கண்ணைத் திறந்து பார்த்துச் சொல்லுவதால் அவருடைய சொல்லை நாம் நம்ப வேண்டுவது கட்டாயந்தான்! ஐயோ! சிவபிரானுக்கு எத்தனை காணி நன்செய் புன்செய்ப் பயிர்கள் மழையில்லாமல் வறண்டு போயின.? அதன் பொருட்டு இருநூற்றைம்பது பதிகங்களால் அவர் மழையை வேண்டி இந்திரன் மேற் பாடியும், அவன் மழை பெய்வியாமையாற் போலும் அவர் பித்துப் பிடித்து ஊர்ஊராய்த் திரிவாராயினது! மேலுந் தமக்குப் பகையா யினாரைக் கொன்று தொலைக்கும் பொருட்டுச் சிவபிரான் இந்திரன் முதலான முதலான தேவர்களை எத்தனையோ முறை வேண்டியும் அவர்கள் அவர்க்கு உதவி செய்யாமையாற் போலும், அவர் அப் பகைவர்களால் துரத்தப்பட்டு மலை களின்மேற் போய் ஒளிந்து கொண்டதுஞ் சுடுகாட்டிற் போய்க் பேய்களோடு சேர்ந்து கொண்டதும்! இங்ஙனமெல்லாம் தேவர்களை வேண்டிப் பாடியும் தமக்குச் சிறிதும் பயன்படாமையால், தமக்குப் பயன்படாவிடினும் பிறர்க் காவது பயன்பட வேண்டுமென்னும் அருளினாலோ, அல்லது தாம் பாடிய அவ்விருக்குவேதப் பாடல்கள் தமக்கே பயன் படாமையைப் பிறர் அறிந்தால் தம்மை ஏளனம் பண்ணுவ ரென்னும் அச்சத்தினாலோ அவர் சனற்குமாரர் முதலான முனிவர்களை வருவித்து அவர்களின் தலையில் அவற்றைக் கட்டி விட்டனர்! அம் முனிவர்களாவது தம் குரு கற்பித்த அவ்விருக்கு வேதப் பாடல்களை ஓதி எந்தத் தேவரிடத்தேனும் எந்த நன்மையேனும் பெற்றனரா? சிவபிரானே இருக்குவேதப் பாடல்களை அருளிச் செய்து மெய்யாயின், அவ்விருக்கு வேதப் பாடல்களால் அவர் வணங்கிய இந்திரன் முதலான தெய்வங்களையல்லவோ சைவர்களும் சைவ சமய ஆசிரியர் களும் வணங்கல் வேண்டும்? சிவபிரானால் வணங்கப் பெற்ற இந்திரன், விஷ்ணு முதலான தேவர்களைச் சைவர்களும் சைவசமயாசிரியர்களும் இகழ்ந்து பேசுதலும், அத் தேவர்கள் சிவபிரானை வந்து வணங்கினார்களென்று கூறுதலும் பொருந் துமா? தமது தெய்வத்தால் வணங்கப் பெற்ற தேவர்களைத் தாமும் வணங்குதலன்றோ முறை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/280&oldid=1584041" இலிருந்து மீள்விக்கப்பட்டது