உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

257

வல்லனவாகா வன்று பகுத்தறிவுடைய மேன் மக்கள் அறியாமல் போவரோ?

கூறிய

இனி, 'மூவா நான்மறை’யாராய்ச்சிச் சிறுசுவடிக்காரர் போலியாராய்ச்சி யுரைகளை அவர் கூறிய வரிசைப்படியே யெடுத்துக்காட்டி அவற்றின் பொருந்தாமை தெரிப்பாம். எமது எமது ‘திருவாசக திருவாசக விரிவுரை யின்

கண்

இந்நிலவுலகத்து மொழிகளுட் பண்டைக்காலந் தொட்டு இன்றுகாறும் இறவாது வழங்குவது தமிழ்மொழி ஒன்றேயல்லது பிற அண்மையானும், என்றும் உளனாகிய றைவன் தன்போல் என்றும் உளதாகிய தமிழ்மொழிக் கணன்றி இடையே இறந்துபட்ட ஆரியம் முதலான மொழிகளில் உண்மை நுண்பொருள்களை அறிவுறுத்தல் உயிர்கட்குப் பயன்படாமையின் அவன் அவற்றை அவற்றின் கண் அருளுதல் ஏலாமையானும்' என்று யாம் எழுதிய பகுதியில் அச் சிறு சுவடிக்காரர் தடை நிகழ்த்துவான் புகுந்து, ஆரியம் இறந்து பட்டதென்றால் ஆரிய மொழியா? அல்லது ஆரிய வேதமா?' என்று வினாவிப் பார்ப்பனரும் பிறநாடுகளி லுள்ளாரும் ஆரிய மொழியைப் பயின்றுவருதலின், அதனை இறந்துபட்டதென்றல் பொருந்தாதெனவுந் தமிழ்நூல்களிலும் பல இறந்து பட்டமையால் தமிழ்மொழியும் இறந்துபட்ட

தனக் கூறலாமோவெனவும், ஆரியந் தமிழ் என்னும் இரு மொழிகளுஞ் சிவபெருமானாலேயே அருளப்பட்டன வாகலின் ஆரியத்தைப் பழிப்போர் சிவபெரு மானையும் பழித்தோரே யாவரெனவுங் கூறினார்.

யாம் மேலே காட்டிய திருவாசகவிரிவுரைச்’ சொற்றொடரிற் போந்த 'இறந்துபட்ட ஆரியம் முதலான மொழிகளில்' எனுஞ் சொற்கள் இறந்துபட்டது ஆரிய மொழியேயல்லாமல் ஆரிய நூல்களல்லவென்னும் எமது கருத்தை நன்கு விளக்குதல் சிறிது கல்வியறிவுடையாகும் உணர்வர். அத்துணைச் சிற்றுணர்ச்சி தானும் இறந்துபட்டது ஆரியமொழியா? ஆரிய வேதமா? என்று வினாநிகழ்த்திய சிறுசுவடிக்காரரை, அவர்க்கு மதிப்புரை தந்தாரும் அவரோ டொத்தாருமே கொண்டாடத் தக்கவர்; அது கிடக்க. இனி, ஆரியமொழி இறந்துபட்டது அன்று

ன்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/282&oldid=1584043" இலிருந்து மீள்விக்கப்பட்டது