உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் 16

என்பதற்கு, அதனைப் பார்ப்பனரும் பிறநாட்டார் பலரும் பயிலுதலே சான்றாமென அவர் கூறினார். இது, மொழியினது பயனை யறியாமையாற் பிறந்த பிழை யுரையாகும். மொழி என்பது கற்றார் முதற் கல்லாதவர் ஈறானா எத்திறத்தவருந் தம்முடைய எண்ணங்களைத் தம்முள் ஒருவர் மற்றொரு வர்க்குத் தெரிவித்துத் தமதுலக வாழ்க்கை யினை நடப்பித்துக் கொள்ளப் பெரிது பயன்படுவதொரு கருவியாகும். எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன்னமே மக்கள் தாம் ஒருங்குகூடியளவளாகி வாழ்தற்கு இன்றியமையாக் கருவியாகப் பேச்சுப்பேசும் முறையினைக் கண்டறிந்தனர்.

தாயும் பிள்ளையும் தந்தையும் மகனும் மனைவியுங் கணவனும் உடன்பிறந்தாரும் உறவினரும் நண்பரும் பிறருந் தாந்தாம் எண்ணும் எண்ணங்களைத் தம்மவர்க்கு ஒலிகளின் வாயிலாகவே புலப்படுத்தி வந்தனராகலிற் பண்டை நாளில் அவவொலிகளின் தொகுதியாகிய மொழி பேச்சுவழக்கிலேயே இருந்தது. பிறகு, ஒரு மொழியைப் பேசுவார் அறிவிலும் நாகரிகத்திலும் முதிர முதிரத், தமது நாகரிக வாழ்க்கை முட்டின்றி நடைபெறுதற்குக் கருவியாகத், தாம் பேசிவந்த சொற்களை எழுத்திலிட்டு எழுதும் முறையினைக் கண்டறிந்து அதனை வழக்கத்திற்குக் கொணர்ந்தனர்; தாம் பேசிவந்த காலங்களில் தம்மில் அறிவான் மிக்கார் பாடிய பாட்டுக் களையும், உரையளவாய்ச் செய்து வழங்கிவந்த நூல்களையும் பின்னர் எழுத்திலிட்டு எழுதி, அவை நம்மை அழியாமற் பாதுகாக்கலாயினர். எழுத்தெழுதத் தெரியாத காலங்களி லெல்லாம் மொழிகள் பேச்சளவாகவே வழங்கிவந்தன. நாகரிக மக்கள் மிகுந்த இந்நாளிலுங்கூட எழுத்தெழுதத் தெரியாத காட்டுமிராண்டிகளும் வேறுபல மக்கட் பிரிவினரும் ஆங்காங்குத் தொகை தொகையாயிருத்தலை எவருங் காணலாம்.

நகர்ப்புறங்களிலும் நாட்டுப் புறங்களிலும் இருக்கும் வில்லியர், வேட்டுவர், குறவர், பள்ளர், பறையர், செம்படவர் முதலானவர் களெல்லாந் தமிழ்மொழி பேசத் தெரிந்தவர்க ளேயல்லாமல் அதனை எழுதத் தெரிந்தவர்களும் அல்லர்; அதன்கண் எழுதப்பட்டிருக்கும் நூல்களைக் கற்கத் தெரிந் தவர்களும் அல்லர். தமிழ்நாட்டுக்குப் புறம்பேயுள்ள நீலகிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/283&oldid=1584044" இலிருந்து மீள்விக்கப்பட்டது