உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

259

மலையிலிருக்குந் தோடர் வடகர் முதலாயினாருந் தமிழ் மொழிபேசத் தெரிந்தவர்களே யல்லாமல் எழுதத் தெரிந்த வர்கள் அல்லர். இன்னும் இந் நாவலந்தீவின்கண் உள்ள மலை களிலுங் காடுகளிலுங் கடற்கரைப் பக்கங்களிலும் உயிர் வாழும் எண்ணிறந்த மக்கட் பிரிவினரெல்லாருந் தமிழ் மொழியைச் சொல்லளவாகவே வழங்கிவருதலை ஒவ்வொரு நாளுங் கண்டறியலாம். இதுபோலவே, நாகரிக வாழ்க்கை யில்லாத மிகப்பழைய காலங்களில் மக்கள் வகுப்பினர் எல்லாருந் தாந்தாம் வழங்கிய மொழிகளை முற்றும்

ஒலிவடிவாகவே வழங்கிவந்தனர்.

6

அதன்பின் நாகரிகம் வளர வளர அவ்வொலிகளை எழுத்து வடிவிலிட்டு வழங்கிவந்தனர். இஃது அவ்வம் மக்கள் வகுப்பினர் தம் வரலாற்று நூல்களை ஆராய்தலானும், இஞ்ஞான்றும் நாகரிகமின்றி உயிர்வாழும் மக்களினத்தாரை நேரே சென்று காண்டலானும் நன்கு தெளியப்படும். எனவே, ஒரு மொழி யென்பது பண்டுதொட்டு இன்றுகாறும் நாகரிகமுடையாரும், அஃதில்லாருந் தத்தம் உள்ளங்களில் எண்ணிய எண்ணங்களை வெளியே தம்மவர்க்குப் புலப் படுத்தற் பொருட்டு பயன்படுத்தி வரும் ஒலிக்கூட்ட மேயன்றிப் பிறிதன்றென்பது தெற்றென உணரப்படும். இங்ஙனம் பேச்சு வழக்கிலிருப்பதே ஒருமொழியென்று சொல்லப்படுதற்கு இயைந்த சிறப்பியல்பு உடையதாவதல்லது, மக்கட் கூட்டத்தவரால் வழங்கப்படாமல், நூலளவிற் கற்றார் சிலரால்மட்டும் பயிலப் பட்டுவருவது ஒருமொழியாக மாட்டாது. ஆனால், இவ்வுண்மை யினைப் பகுத்துணர்ந்து பார்க்கமாட்டாத அச் சிறுசுவடிக் காரரும் அவர்க்குத் துணையாயினாருமோ, தமிழைப் போலவே ஆரியமும் வழக்கிலுள்ளதே யாகுமன்றி இறந்து பட்டதாகாது என்று கட்டுறுத்திச் சொல்கின்றார். அற்றேல், தமிழ்மொழி பேசும்மக்கள் எல்லாரிடத்தும், அவர் கற்றவராயினுங் கல்லாதவராயினும், நாகரிகராயினும், அஃதிலராயினும், பெண்டி ராயினும், பிள்ளைகளாயினும், அவரெல் லார் மாட்டும் நாம் தமிழில் உரையாடினால் அவரெல்லாரும் நாம் சொல்வ தின்னதென உணர்ந்து நம்மொடு தாமும் நன்குரையாடி மகிழ்வர். இதுபோல், நாம் ஆரியத்தில் எல்லாரோடும் பேசுதல் இயலுமோ? அல்லது அதிற் கடிதமாவது எல்லார்க்கும்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/284&oldid=1584045" இலிருந்து மீள்விக்கப்பட்டது