உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

மறைமலையம் 16

முதற் பதிப்பின் முகவுரை

இவ்வுரை நூலின்கண் அடங்கியிருக்கின்ற ஆறு கட்டுரை களும், ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவரான அடிசன் சொற்சுவை பொருட்சுவை நிரம்ப எழுதிய

என்பார்

கட்டுரைகளினின்றும் பெரும்பாலும் மொழி பெயர்த்துச் செய்யப்பட்டனவாகும். ஆங்கிலமொழியின் அமைப்புஞ் சந்தமிழ்மொழியின் அமைப்பும் பலவகையால் மாறுபட்டுக் கிடத்தலின், ஆங்கிலத்திற் கிடந்த அரிய நூற்பொருளை ஆண்டு நின்றவாறே எடுத்துச் செந்தமிழில் மொழிபெயர்த்தல் செந்தமிழறிஞர்க்கு இன்பம் பயவாதாய் ஒழியும். ஆகவே, அம்மொழிநூலில் மிகவுஞ் சுவைப்பதாய் விளங்கும் பொரு ளைச் செந்தமிழ் இயல்புக்கு இணங்குமாற்றாற் சிறுபான்மை திரித்தும், வேறுசில சேர்த்தும் அதனை இயற்றுதல் வேண்டும். இம்முறை வழுவா வண்ணம், அடிசனார் உரைப்பொருளை வேண்டு மிடங்களில் இயையுமாறு திரித்தும், எனக்கு ங்காங்குத் தென்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை உடன் கூட்டியும் இவ்வுரைகளை மாழிபெயர்த்து இயற்று வேனாயினேன். ஆங்கிலத்தில் இவ்வுரைகளைப் பயின்றார்க் கன்றி ஏனையோர்க்கு, இவற்றை எழுதுதற்கண் யான் எடுத்த உழைப்பும் பிறவுஞ் சிறிதும் விளங்கா. தமிழ் ஒன்றே வல்லார்க்கு து மொழிபெயர்ப்பு நூலென்பது சிறிதும் புலனாகாது. ஆங்கிலம் பயிலுந் தமிழ் மாணவர் தமிழினும் புலமை எய்த வேண்டுவராயின், அவர்க்கு இக்கட்டுரைகள் மிகவும் பயன்படு மென்பது இதனை ஒரு சிறிது நோக்கினுந் தெற்றென விளங்கும். ஆங்கிலப்பயிற்சி யின்றித் தமிழில் வல்லராக விரும்புநர்க்கும் இது சொன்னயம் பொருணயங்களைத் தெளிவு பெறக் காட்டுமென்னுந் துணிபுடையேன்.

L

நாகை வேதாசலம் பிள்ளை

சென்னை கிறிஸ்டியன் காலேஜ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/29&oldid=1583453" இலிருந்து மீள்விக்கப்பட்டது