உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

மூன்றாம் பதிப்பின் முகவுரை

ன.

இந்நூல் இயற்றப்பட்டு முப்பதாண்டுகள் ஆ யின முப்பதாண்டுகட்கு முன் இந்நாட்டில் தமிழ்ப்பயிற்சி யிருந்த நிலைமையோடு இப்போதிருக்கும் அதன் நிலைமையினை ஒப்பிட்டு நோக்குங்கால், இனித் தமிழ்மொழிப் பயிற்சி எங்கும் பரவுமென்றெண்ணி மகிழ வேண்டுவதாகின்றது. இந்நூலின் முதற்பதிப்பிலும், அக் காலத்தில் இயற்றப்பட்ட எம்முடைய நூல்கள் பிறவற்றினும் வடசொற்கள் கலந்திருந்தன. தமிழறிஞர் பலர் அக்காலத்தியற்றிய நூல்களிலுங் கட்டுரைகளிலும் வடசொற்களும் பிறசொற்களும் தமிழிற் கலத்தலால், நாடோறும் வழக்கில் உள்ள நிலம் நீர் நெருப்பு சோறு ஒளி கோயில் குளம் முதலான எத்தனையோ பல தமிழ்ச்சொற்களும் வழங்காமல் போதலையுணர்ந்து, பிற மொழிக் கலப்பைத் தமிழினின்றும் அறவே ஒழித்தற்கு முயலத் துவங்கினோம்.

அதனால், இன்றைக்குப் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன் வளிவந்த இந்நூலின் இரண்டாம் பதிப்பு முற்றுந் தனிச் செந்தமிழ் நடையினதாகச் செய்யப்பட்டது. அங்ஙனமே, எம்முடைய மற்றைய நூல்களுந் தனிச் செந்தமிழ் நடை யினவாகவே செய்யப்பட்டன; செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்யவே, இப்போது தனிச் செந்தமிழ்நடையே பெரும்பாலும் எங்கும் வழங்கி வருகின்றது. தமிழ் வல்லவர்கள் எல்லாரும் இனித் தனிச் செந்தமிழில் திருத்தமாக எழுதி னாலன்றி அவர்களுடைய நூல்கள் மணம்பெறா என்பதனை உள்ளத்திற் பதித்து அவர்கள் தமிழன்னையை ஓம்பி நலம் பெறுவார்களாக!

இந்நூலின் இப்பதிப்பில் இன்னும் பல சீர்திருத்தங்களுஞ் செய்யப்பட்டிருக்கின்றன.

பல்லாவரம்

பொதுநிலைக்கழக நிலையம்

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/28&oldid=1583452" இலிருந்து மீள்விக்கப்பட்டது