உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

287

உள்ளவாறே எடுத்துக்கூறும் பண்டைத் தமிழின் உண்மைச் செய்யுள் வழக்கையும், அவ் வழக்கையே பின்பற்றி நாயன்மார் உண்மை வரலாறுகளை உள்ளவாறே கூறப்புகுந்த சேக்கிழாரின் திருவுள்ளக் கிடையையும் ஆராய்ந்துகாண வல்லார்க்கு இந்நேயர்கூற்றுப் பொருந்தாமை நன்குவிளங்கும். தாம் பாடக் குறித்த நாடு நகரங்களில் உள்ள சிறப்புக்களை உள்ளவாறே எடுத்துக், கற்போர் உணர்வு சலிப்படையா வகையாய் இயன்ற மட்டுஞ் சுருக்கமாகவும் விளக்கமாகவும் அழகுபடுத்திக் கூறுவதே பண்டைத் தமிழ் நல்லிசைப் புலவர்க்குரிய செய்யுள் வழக்கின் முறையாகும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர்க்குரிய செய்யுள் முறையோ, நாட்டு வளமில்லாத ஊரை எல்லா வளங்களும் உடையதெனவும், நகர அமைப்புகள் இல்லாததொன்றை எல்லா அமைப்புகளும் நால்வகை யரண்களும் உடையதெனவும் புனைந்து பொய் யாகக்கட்டி நூற்றுக்கணக்கான செய்யுட்களாற் கற்போரு ணர்வு சலிப்படையுமாறு வாளா விரித்துக் கூறுவதாம்.

இவ் விரண் ன் வேறுபாட்டையும் பண்டைச் செந்தமிழ் இலக்கியங்களாகிய 'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை’, ‘பத்துப் பாட்டு’, ‘கலித்தொகை’, முதலியவற்றையும், பின்றைத் தமிழ்க் காப்பியங்களும் புராணங்களுமாகிய ‘கம்பர் ராமாயணம்’, ‘நைடதம்’, ‘திருத்தணிகைப் புராணம்' முதலியவற்றையும் ஒத்துநோக்கி யாராய்ந்து கண்டுகொள்க.

ஆசிரியர் சேக்கிழார் பாடிய 'பெரிய புராணத்தைக் ஆ கம்பர் பாடப் புகுந்தனராயின் இருபதினாயிரஞ் செய்யுட் களுக்குக் குறையாமல் வாளா விரித்துப் பாடியிருப்பார். இப்போதுள்ள கம்பராமாயணத்திற் காணப்படும் வீணான செய்யுட்களை அகற்றிவிட்டாற் கதைத் தொடர்பும் அழகுங்

கட

ாமல் அந் நூல் மூன்றில் ஒருபங்காகச் சுருங்கிவிடும். இங்ஙனம் இயற்கைக்கு மாறான பொய்யும் புளுகும் புனைந்துகட்டிச் சொல்லும் பிற்காலத்துப் புலவர் செய்யுள் வழக்கும் பார்த்து, இதனைப்போலவே சேக்கிழாரது செய்யுள் வழக்கும் இருத்தல் வேண்டுமெனத் துணிதல் தன் கண்களுக்கு மஞ்சட்கண்ணாடி இ இட்டான் ஒருவன் தான் காண்பன

வல்லாம் மஞ்சள் நிறமாகத் தோன்றக்கண்டு, அங்ஙனந் தோன்றுதல் தான் அணிந்திருக்குங் கண்ணாடியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/312&oldid=1584073" இலிருந்து மீள்விக்கப்பட்டது