உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

❖ LDMMLDMOLD -16 →

நேர்ந்ததென அறியாமல், தான் காணும் எல்லாப்பொருள் களும் மஞ்சள் நிறமுடையனவே என்று கூறிப் பிறரோடு அழிவழக்குப் பேசுதற்கே ஒப்பாவதாம் என்க.

வை

இனி, ஆசிரியர் சேக்கிழார் பாடுதற்கு எடுத்துக்கொண்ட நாயன்மார்களிற் சோழநாட்டிற் பிறந்தருளியவர்களின் ஊர்க ளெல்லாம் ஒரேவகையான எல்லா வளங்களும் உடையன வாய் இரா. சில ஊர்கள் நாட்டுவள முடையனவாய் இருக்கும்; சில நகரவளமுடையனவாய் இருக்கும்; வேறு சில அவ் வளங்கள் இல்லாதனவாயும் இருக்கும்; நாட்டுவளம் நகரவளம் உடையன வற்றுள்ளும் ஓர் ஊரின் வளத்தைப்போல் மற்றோர் ஊரின் வளம் ஒத்திரா; ஒவ்வோர் ஊரும் வேறு வேறு வளங்களும் வேறு வேறு அமைப்புகளும் உடையனவாய் இருக்கும்; தம்மைப் பாடப்புகும் நல்லிசைப் புலவர்கள் அவ்வவ் விடத்தின் வளங்களையும் அமைப்புக்களையும் ஆங்காங்கு உள்ளவாறே வைத்துத் தம் பாட்டுக்களில் அழகுபடப் பாடுவர். அவ்வாறு பாடப்படுஞ் செய்யுட் பொருள்களை யுணர்ந்தவர் அவ்வவ்வூர்களே நேரே சென்று காண்புழிப், பாட்டிற் சொல்லியவாறே அவை அமைந்திருக் கும் உண்மையைக் கண்டு, அவற்றைப் பாடிய புலவனை வியந்து மகிழ்வர். இஃது எதுபோலவோ வெனின், ஒருவனது வடிவத்தையும் அவனிருக்கும் மாளிகையினையும் ஓவியத்தில் வரைந்து காட்டப் புகுந்த ஓர் ஓவியக்காரன் சிறிதும் வழுவாமல் அவ் விரண்டனையும் திறமையாக வரைந்து காட்டிய வழி அவ்வோவியத்தையும் அதிற் றீட்டப்பட்ட வடிவமுடைய மகனையும் மாளிகையையுங் கண்டு அவை முழுதும் ஒத்திருந்தக் கால், அவற்றை வரைந்தவன் திறத்தை வியந்து மகிழ்தல்போல வென்க மற்று ஓர் ஓவியத்திற் றீட்டிய வடிவம் அதனையுடைய மகனையாதல் மாளிகையையாதல் ஒவ்வாமல் வேறுபட்டுத் தோன்றியவழி அவற்றைக் காண்பார் அவற்றை வரைந்த ஓவியக்காரன் இகழ்ந்து மகிழ்வின்றிப் போதல்போல, ஒரு காப்பியப் புலவனும் தான் பாடிய செய்யுட்பொருள் அதற்கு முதலாயுள்ள இயற்கைப் பொரு ளோடு ஒவ்வாமல் மாறுபட்ட வழி அதனைக் கருத்தூன்றிக் கற்பார் அதன் பொய்மையுணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/313&oldid=1584074" இலிருந்து மீள்விக்கப்பட்டது