உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

289

அதனை ஆக்கியோன் பால் வெறுப்புற்று உவகையின்றிச் செல்வரெனவும் உணர்ந்து கொள்க.

ஆ சிரியர் சேக்கிழாரோ, செந்தமிழ்ப் புலமை மலிந்த நல்லிசைப் புலவராகலின் அவர் பண்டைச் செந்தமிழ் நல்லிசைப் புலவரின் மெய்வழக்கையே தழீஇத் தாம் பாடுதற்கு எடுத்த நாடு நகரங்களில் உள்ள சிறப்புக்களை உள்ளவாறே கூறுதலும், அவ்வளங்கள் மிகுதியாய் இல்லாதவற்றைச் சில சொற்களாற் கூறிப்போதலுமே மேற் கொண்டாரென்பது ஆங்காங்கு அவர் பாடியிருப்பனவற்றை உற்று ஆராய்தலாற் புலப்படும். சோழநாட்டுள்ளேயே ஓரூர் நாட்டுவள முடைய தாயும் மற்றொன்று நகரவள முடையதாயும், வேறொன்று அவையிரண்டும் மிக இலவாயும் இங்ஙனம் பல திறப்பட்டிருத் தலை இஞ்ஞான்றும் அவற்றை நேரே சென்று காண்பார் நன்கு ணர்ந்து கொள்வர். இங்ஙனம் வளத்தானும் அமைப்பானும் ஒன்றோடென்று ஒவ்வா ஊர்கட்கெல்லாம் வளங்கள் கற்பிப்பான் புகுந்து, அவைமாட் டெல்லாம் காணப்படாத வற்றை இயற்கைக்கு மாறாய்ப் புனைந்துகட்டிப் பொதுவாக 'நாட்டுச் சிறப்பு' என ஒன்று பாடிப் பெரிய புராணத்தின் கண் முதலில் வைத்தாரென்றல், ஆசிரியர் சேக்கிழாரின் தெய்வச் செந்தமிழ் நல்லிசைப் புலமைக்கு இழுக்கந் தேடுவதாய் முடியுமென்று ஓர்ந்து கொள்க.

இனித் தடுத்தாட்கொண்ட புராணமுதலில் திருமுனைப் பாடி நாட்டிற்கும், அதன்கட் சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தருளிய திருநாவலூர்க்கும் ஆசிரியர் நாட்டுச்சிறப்பு நகரச் சிறப்புகள் விரித்தோதாது, "பெருகிய வளத்தான்மிக்க பெருந்திருநாடு” என்று மட்டுஞ் சுருங்கச்சொல்லிச் செல்லுதல் என்னை யெனின்; உற்று நோக்கு மிடத்துத் 'தடுத்தாட் கொண்ட புராணமே' திருத்தொண்டர் புராணமாய் முடிந்திடுதலின், அத்துணைப் பெரிதாகிய அப் புராணத்திற் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றையும் திருமணச் சிறப்பையும் கூறுதலிற் கருத்து ஊன்றிய ஆசிரியர் அதனைவிடுத்து, நாடு நகரங் களைப் பாடிக் கொண்டிருப்பராயின், அது, தன்னைக் கற்பார்க்கு இன்பம் பயவாதாகலிற், 'சிலப்பதிகாரத்' திற்போல நாயனார் வரலாற்றைத் துவங்கி முதலிற் றிருமணச்சிறப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/314&oldid=1584075" இலிருந்து மீள்விக்கப்பட்டது