உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

❖ LDMMLDMшLD -16 →

ஆசிரியர் விரித்துரைப்பராயினா ரென்க. முதன்மையான நாயனார் புராணங் கூறுதற்கெடுத்து, அதனைப் பாடிக் கொண்டு செல்லுதற் கிடையே அமயம் நேர்ந்துழியெல்லாம் நாட்டுவளம் நகரவளம் கூறுதல் கற்போருணர்வு சலிப் புறாமல் இன்புறுதற் கேதுவாமாகலின்,ஆசிரியர் விரித் தோதுதற்கேற்ற இடங்களில் அவைதம்மை இடையிடையே விரிப்பர்.

சிலப்பதிகாரத்திலும் ஆசிரியர் இளங்கோவடிகள் அந்நூல் முதற்கட் காவிரிப்பூட்டினம் வளங்களை ஓதாது இடையே ‘இந்திரவிழவூரெடுத்த காதை'யில் அவற்றை ஓதுதல் காண்க. இங்ஙனங் கற்போருணர்வு சலியாமைப் பொருட்டு நல்லிசைப் புலவர் நூல்யாக்குந் திறத்தை எம்முடைய முல்லைப் பாட்டாராய்ச்சியுரை' யிலும் ‘பட்டினப்பாலை யாராய்ச்சி யுரை'யிலும் விரித்தெழுதியிருக்கின்றேம். அதனை ஆண்டுக் கண்டு கண்டு கொள்க; கொள்க; ஈண்டு விரிப்பிற் பெருகும். சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையம்பலத்தை வணங்கச் சென்றுழி, ஆண்டு நாட்டுவளம் நகரவளங் கூறுதற்கு அமயம் வாய்த்தமையின், 92 ஆஞ் செய்யுள் முதல் 102 ஆஞ் செய்யுள் இறுதியாகச் சேக்கிழார் அவற்றை விரித்துப்பாடுதல் காண்க. தில்லைநகர் சோழநாட்டின் கண்ணதேயாகலின், அதற்குக் கூறிய நாட்டு வள நகரவளங்கள் சோழநாட்டிற்கும் உரியனவல்லவோ? இங்ஙனமே, சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தோடு தொடர்புடைய ‘ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்தும் சோழநாட்டின் கண்ணதாகிய 'திருப்பெரு மங்கலம்' என்னும் நகரின் சிறப்பை ஆசிரியர் முதல் நான்கு செய்யுட்களால் அழகுறப் பாடியிருக்கின்றார்; இச் சிறப்பும் சோழநாட்டிற் குரியதன்றே?

அற்றேல், திருக்குறிப்புத்தொண்டர் புராணத்தில் 110 செய்யுட்களால் தொண்டைநாட்டின் நாட்டுவள நகரவளங் களை விரித்தோதிய அவ்வளவுக்கு ஆசிரியர் சோழநாட்டு வளங்களை விரித்து ஓதிற்றிலரென்று ஒன்று கொள்ளப் படுமாலெனிற்; சோழ நாடு நீரும் வயலும் நிறைந்த மருத நிலவளம் ஒன்றே பெரும்பாலும் உடையது; மற்றுத் தொண்டை நாடோ, மருத நிலவளத்தோடு, மலையடுத்த குறிஞ்சிநில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/315&oldid=1584076" இலிருந்து மீள்விக்கப்பட்டது