உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

291

வளமும், காடு அடுத்த முல்லைநில வளமும், கடலடுத்த நெய்தல்நில வளமும் காஞ்சி நகரச்சிறப்பும் ஒருங்குடைய ய தாகலின் அவையெல்லாம் 110-ச் செய்யுட்களால் இயன்றமட்டுஞ் சுருக்கியே ஆசிரியர் அருளிச்செய்தனர். இவை தம்மைக் கம்பராவது கச்சியப்ப முனிவராவது பாடப் புகுந்திருந்தால் ஐந்நூறு செய்யுட்களுக்குக் குறையப் பாடியிரார். சேக்கிழார் இல்லது கூறா வாய்மையராகலிற், சோழ நாட்டை அணிந்துரைக்க வேண்டுமளவுக்குச் சோழ நாட்டையும்,

ண்டை நாட்டை அணிந்துரைக்க வேண்டுமளவுக்குத் தாண்டை நாட்டையும், இங்ஙனமே மலைநாடு காங்குநாடுகளையும் உண்மை வழாது புராணங்களினி டையிடையே பாடியருளினாரென்க. அநபாயசோழன் செங்கோ லோச்சிய இடம் என்பது பற்றியாவது, பரவையார் சங்கிலியார் என்னும் பிராட்டிமாரை மணம்புரிந்து கொண்ட

ங்கள் என்பது பற்றியாவது, தாம் பிறந்தருளிய நாடென்பது பற்றியாவது அவ்வந் நாடுநகரங்களுக்கு எப்படியாயினும் சிறப்புச் சொல்லவேண்டுமென்று மடி கட்டிக்கொண்டு ஆசிரியர் சேக்கிழார் பாடப்புகுந்தவர் அல்லர்.

வந்த

சிறப்போடு,

மேற்கூறிய சான்றோர்களால் அவ்வவற்றிற்கு இயற்கையமைப்பிலேயும் பல சிறப்புகள் காணப்படுமாயின் மட்டும் ஆங்காங்குள்ள நாடுநகரங்களை அணிந்துரைப்பர்; அங்ஙனம் உரைக்கின்றுழியுங், கதைத் தொடர்பைக் கருத்தூன்றிக் கற்றுச் செல்வார்க்கு உணர்வு சலியாவாறு எவ்வளவு கூறுதல் தக்கதோ அவ்வளவே கூறுவர். ஆதலால், இன்னின்னார் பொருட்டு அவ் அவர்தம் நாடுநகரங் களை ஆசிரியர் எங்ஙனமேனும் விரித்துப் பாடியிருத்தல் வேண்டுமென்று, ஆக்கியோன் கருத்தும் அவன் மேற் காண்ட செய்யுள்வழக்கி னியல்பும் பகுத்துணராது கிளத்தல் ஏதமாமென்க.

இனித், தில்லைவாழந்தணர் புராணத்தின்கண் நாட்டுவள நகரவளங் கூறப்படவில்லையென அதனைத் தமது வழக்கிற்கு ஓர் உதவியாகக் கூறவந்த நண்பர், அப்புராணத் திற்குச் சிறிது முன்னே சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைக்குச் சென்றதனைக் கூறுங்கால் அவ்விரண்டு வளங்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/316&oldid=1584077" இலிருந்து மீள்விக்கப்பட்டது