உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

293

இல்லாத ஏற்றத்தைக் கூற மனம் இசையாராய், நாயனார் வரலாற்றை மட்டுங் கூறலாயினர். கரிகாற்சோழற்குப் பின் காவிரிப்பூம் பட்டினம் கடல்கோட்பாடு அழிந்தமை ‘மணிமேகலை' என்னுஞ் செந்தமிழ்க் காப்பியத்திற் சொல்லப் பட்டிருத்தல் காண்க. அங்ஙனம் அஃது அழிந்தபின், உறையூரே பழைய சோழமன்னர்க்குத் தலை நகராயிற்று. நகராயிற்று. இனிச், சேக்கிழாரடிகள் க காலத்திற் சோழமன்னர்க்குத் தலை நகராயிருந்தது காஞ்சிமா நகரேயா மென்பது கல்வெட்டுகளிற்

காண்க.

இனிச், சோழநாட்டின்கண் மிகச் சிறந்ததாகிய தில்லையின் நாட்டுவள நகரவளங்களைச் சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தின்கண் ஆசிரியர் விரித்துச் சொன்னமை பற்றியே, இளையான் குடிக்கும் திருக்கோவலூர்க்கும் அவ்வளங்கள் கூறிற்றிலர். பழையாறைக்கும் அவ்வாறே.

இனி, எறிபத்தரது கருவூர் அநபாயசோழ வேந்தற்குத் தலை நகரானமைபற்றி, அதற்குக் கூறவேண்டும் நகரச்சிறப்பு மட்டுமே எடுத்துரைத்தார். இயைபில்லாத நாட்டுச் சிறப்பைத், தலைநகராகிய அதற்கு ஆசிரியர் கூறாது விட்டது சாலப் பொருத்தமேயாம். ஏனாதியாரது எயினனூர் நாட்டுவளம் மட்டுங் கூறுதற் கேற்றமை கண்டு அதற்கு முதலிரண்டு செய்யுட்களில் அது கூறியிருக்க, அது சொல்லப்படவில்லை யென்று நண்பர் உரைத்தது பொய்யுரையாம்.

ய ய

இனிக், காஞ்சிமாநகர் சோழமன்னர்க்குத் தலைநகராய் எல்லாவளங்களும் பொருந்தப்பெற் றிருந்தமையானும், இறைவி இறைவனே வேண்டித் தவஞ்செய்து முப்பத்திரண்டு அறங்களும் வளர்த்த இடமாதலானும், அதனையுடை தாண்டைநாடு நானிலவளங்களும் மிக்குக் கழிபெருஞ் சிறப்புடைத்தாய் விளங்கினமையானும் ஆசிரியர் சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் இருந்த அந் நகரினைப் பாடவந்த விடத்து, அத் தொண்டர் வரலாறு நீளவுரைக்கவேண்ட கண்டு. அதனைக் கூறுதற்கு முன் தொண்டைநாட்டு வளங்களை விரித்துரைப்பதற்கு அமயம் பெற்றார்.. தொண்டை நாட்டு வளங் கூறுகின்றுழி நானில வளங்களும் ஆசிரியர் ஒன்றன்பின் ஒன்றாய் எடுத்து மொழிதலும், அவர் மொழிந்த

ாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/318&oldid=1584079" இலிருந்து மீள்விக்கப்பட்டது