உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

❖ LDM MLDMELD -16 →

அவ்வளங்கள் இன்றுகாறுந் தொண்டை நாட்டின் கண் அங்ஙனமே காணப்படுதலும் நினையவல்லார்க்குச் சேக்கிழார் உள்ளதை உள்ளவாறே கிளக்கும் வாய்மையானராதல் நன்கு புலப்படும்.

இனிச், சோழநாட்டுக்குப் பொதுவாக வைத்து நாட்டு வளம் நகரவளம் விரித்தோதினமையின், அச் சோழநாட்டின் கண் திருத்தொண்டர் பிறந்தருளிய பல ஊர்கட்குஞ் சேக்கிழார் அவ் விருவகை வளங்களுங் கூறிற்றிலரெனப் புகன்ற நண்பர் உரை பொய்யுரையாதல் காட்டுதும். குங்கிலியக்கலயரிருந்த திருக்கடவூருக்கு முதல் நான்கு செய்யுட்களில் நாட்டு வளமும், மானக்கஞ்சாறரிருந்த திருக்கஞ்சாறூர்க்கு முதல் ஐந்து செய்யுட்களில் நாட்டுவள நகர வளங்களும், அரிவாட்டரிருந்த திருக்கண மங்கலத்திற்கு முதன் மூன்று செய்யுட்களில் நாட்டுவளமும், முருகரிருந்த திருப்பூம்புகலூர்க்கு முதல் நான்கு செய்யுட்களில் நாட்டுவளம், உருத்திர பசுபதியா ரிருந்த திருத்தலையூர்க்கு முதலிரண்டு செய்யுட்களில் நகர்வளமும், திருநாளைப் போவாரிருந்த திருவாதனூர்க்கு முதல் நான்கு செய்யுட்களில் நாட்டுவள நகரவளங்களும், திருநாவுக்கரையர் பிறந்தருளிய திருமுனைப்பாடி நாட்டுக்கு இரண்டு முதற் பதினோராஞ் செய்யுள் ஈறாக நாட்டுவள நகரவளங்களும், நமிநந்தியடிக ளிருந்த திருவேமப் பேறூர்க்கு முதன் மூன்று செய்யுட்களில் நாட்டுவள நகரவளங்களும், திருஞானசம்பந்தப் பிள்ளையார் பிறந்தருளிய சீர்காழிக்கு இரண்டு முதற் மூன்றாஞ் செய்யுளிறுதியாக நகர வளமும், ஏயர்கோன் கலிக்கமாரிருந்த திருப்பெருமங்கலத்திற்கு முதல் மூன்று செய்யுட்களில் நகரவளமும், புகழ்ச்சோழர் இருந்த உறையூருக்கு இரண்டாஞ் செய்யுள் முதல் ஏழாஞ் செய்யுள் ஈறாக நகரவளமும், அதிபத்தர் இருந்த நாகபட்டினம் கடற்கரை நகரமாதலால் அதற்கு இரண்டாஞ் செய்யுள் முதல் எட்டாஞ் செய்யுளிறுதி யாக நெய்தல் நிலவளமும். முனையடுவாரது திருநீடூர்க்கு முதற் செய்யுளில் நாட்டுவளமும், செருத்துணை யார் தம் தஞ்சாவூர்க்கு முதற் செய்யுளில் நாட்டு வளமும் ஆசிரியர் பாடியிருக்கின்றார். இங்ஙனஞ் சோழநாட்டின் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/319&oldid=1584080" இலிருந்து மீள்விக்கப்பட்டது