உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

295

ஆங்காங்குள்ள ஊர்கட்கு ஆசிரியர் சேக்கிழார் பாடியிருக்கும் நாட்டுவள நகரவளச் செய்யுட்களை மட்டுங் கூட்டிப் பார்த்தால் அவை எழுபத்தெட்டுக்குமேற் போகின்றன.

ர்

ச் செய்யுட்களெல்லாம் பொதுவாகச் சோழநாட்டின் சிறப்புக்களாகவே முடிந்திடுதலால், இவற்றின் வேறாக முப்பத்தைந்து செய்யுட்களால் தனிச் சோழநாட்டுச் சிறப்பும், திருவாரூர் சிறப்பென நகரச்சிறப்பும் இயற்றித் திருத் தொண்டர் புராணத்தின் முதலில் ஆசிரியர் அமைத்திட்டார் எனக் கிளக்கும் நண்பருரை, ஒப்புயர்வில்லா இத் திருத் தொண்டர் புராணத்திற்குக் 'கூறியது கூறல்' ‘மிகைபடக் கூறல்' என்னுங் குற்றங்களை ஏற்றுதலால் அவர் தம் போலி யுரை கொள்ளற் பாலதன்றென மறுக்க. அற்றேற், சோழ நாட்டில் திருத்தொண்டர் இருந்த சிற்சில ஊர்கட்கு ஆசிரியர் நாட்டுவள நகரவளங் கூறாது விட்ட தென்னையெனின்; தாம் கூறுதற்கேற்ற தனிச் சிறப்புங்களுடைய ஊர்களின் இயற்கை யமைப்பை உற்றுநோக்கி, நாட்டுவளம் மிக்கவற்றிற்கு நாட்டு வளமும் நகரவளமும் மிக்கவற்றிற்கு நகரவளமும், அவை யிரண்டும் மிக்கவற்றிற்கு, அவையிரண்டுங் கூறி, இத்தகைய தனிச் சிறப்புகள் இல்லாதவற்றிற்கும், முன்வந்த புராணங்களிற் கூறப்பட்ட சிறப்புகளுள் அடங்குவன வற்றிற்கும அவ்விருகை வளங்களுள் ஏதுங் கூறாமலும் ஏகுவர்.

முந்ற்போந்த மூர்த்தி நாயனார் புராணத்திற் பாண்டி நாட்டு வளம் முதல்ஆறுசெய்யுட்களில் எடுத்துரைத்தமையால், பிற்போந்த குலச்சிறையார் புராணத்தும், நின்றசீர் நெடு மாறர் புராணத்தும், மங்கையர்க்கரசியார் புராணத்தும் ஆசிரியர் பாண்டி நாட்டு வளங்களை மீண்டும் எடுத்தோதாது செல்லும் நுட்பங் கண்டுகொள்க. திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் திருமுனைப் பாடி நாட்டுவள நகரவளங்களை ஓதக் கருதினமையின், புராணத் துவக்கமாகிய தடுத்தாட் கொண்ட புராணத்திலும் பின்வரும் நரசிங்க முனையரையர் புராணத்திலும் அவ் வளங்களை ஆசிரியர் கூறாமையும், மலைநாட்டு வளங்களை முற்போந்த விறன்மிண்டர் புராணத்திற் சொல்லி விட்டமையால் மீண்டும் அவற்றைக் கழறிற்றறிவார் புராணத்திற் சொல்லாது ஆண்டுக் கூறுதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/320&oldid=1584081" இலிருந்து மீள்விக்கப்பட்டது