உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

❖ LDMMLDMOшLD -16 →

கேற்ற நகர வளத்தை மட்டுங் கூறிச் செல்லுதலும், இங்ஙனமே சோழநாடு தொண்டை நாட்டிலுள்ள ஊர்கட்கு முதலில் அவ் வளங்கள் சொல்லியிருந்தாற் பின் வரும் புராணங்களில் அவ்வூர்கட்கு அவ்வளங்களை மீண்டும் உரையாமையும் உற்றுநோக்கற் பாலனவாம் என்க. ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறெல்லாஞ், சுவை கெடாமலுங் கற்போர் உணர்வு சலியாமலும் நூல்யாக்குந் திறமும் நுட்பமும் உண்மையே கூறும் பழந்தமிழ் இலக்கியங்களிற் பயின்றார்க்கன்றிப், பொய்யுரை புகலும் பிற்றைநாட் புராணங்களிற் பழகினார்க்கு ஒரு சிறிதும் விளங்கா.

சு

இனித், திருத்தொண்டத் தொகை யருளிச்செய்த சுந்தரமூர்த்தி நாயனாரது வரலாறும், திருத்தொண்டத் தொகையிற் காணப்பட்ட தொண்டர்களின் வரலாறுமே பாடப்புகுந்த ஆசிரியர் சேக்கிழார் அவற்றை விடுத்து, ‘மநுநீதி கண்ட சோழனது வரலாற்றினைப் பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே விரித்துக் கூறினாரென்றல், தாங்கூறும் நூற்கு யைபில்லாத தொன்றனை இடைவிரித்ததாகிய ‘மற்றொன்று விரித்தல்' என்னுங் குற்றமாய் முடியுமாதலின், அது சேக்கிழார் செய்தது அன்றெனவும், தம்மனோர் பாராட்டும் மனு நீதிக்கு ஏற்றங் கற்பிக்க விழைந்த ஆரியப் பார்ப்பனர் எவரோ ஒருவர், செங்கோன் முறை வழுவாது செயற்கருஞ் செயல்புரிந்த தமிழ்ச் சோழ மன்னன் ஒருவன் அப் பெயர் பூண்டமையறிந்து அவனது வரலாற்றினைப் பாடி அதன்கட் சேர்த்துவிட்ட ன ரனவும் யாங் கூறியதனை மறுக்கப் புகுந்தோர் தாங்கொண்ட கொள்கையினை நிறுத்துதற்கு ஏற்ற சான்று ஒன்றாயினுங் காட்டினாரல்லர். அவர் கூறிய போலிச்சான்றுகள் சிலவற்றையும் ஆராய்வாம். ‘பஞ்சபூத சிவதலங்களில் முதலாவ’ தாகையினால் திருவாரூர்ச் சிறப்பு முதற்கட் சொல்லப்படுதல் வேண்டுமென்கிறார். மண், புனல், அனல், கால், வெளி என்னும் ஐம்பெரும் பொருள்களின் உருவாய் வயங்குஞ் சிவலிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களையே ‘பஞ்சபூத சிவஸ் தலங்கள்' என்று வடமொழிப் பெயர்களால் ஆரவாரமாய்க் கூறுவர். மண்ணாலாகிய அருட்குறி திருவாரூரின்கண் மட்டும் உளதன்று; திருக்காஞ்சியிலும் அஃது உளது; அதனால், அவ்வைம்பெருந் திருக்கோயில்களிற் சேர்ந்தது திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/321&oldid=1584082" இலிருந்து மீள்விக்கப்பட்டது