உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

297

காஞ்சியே என்று ஒரு சாராரும், அற்றன்று திருவாரூரே யென்று மற்றொரு சாராருங் கூறாநிற்பர். ஆகவே, ஐம்பெருந் திருக்கோயில்களுள் ஒன்றாதல்பற்றித் திருவாரூர்ச் சிறப்பு முற்கூறக்வேண்டு மென்பார்க்கு, அவ்வேதுவே பற்றித் திருக்காஞ்சிச் சிறப்பு முற்கூறாமை என்னை என்னும் வினா முன் நிற்குமன்றே. இனிப், பரவை நாச்சியார் பொருட்டு இறைவனே தூதாகச் சென்ற தெருக்களுடைய சிறப்பினால், திருவாரூர்ச் சிறப்பு முன்ஓதல் வேண்டுமெனின்; அங்ஙனமே, கூந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட் கொள்ளும் பொருட்டு உருவுகொண்டு வெளிப்போந்த திருவெண்ணெய் நல்லூர்ப் பெருமான் திருவடிச் சுவடுகள் பட்ட இடமாதலின் திருவெண் ணெய்நல்லூர்ச் சிறப்பும் அதனோடு சுந்தரமூர்த்திகள் பிறந்தருளிய இடமுமாதலின் திருநாவலூர்ச் சிறப்பும் முன் ஓதல்வேண்டு மென்பார்க்கு விடைகூறுமா றியாங்ஙனமென்க. இனிச், சேக்கிழாரை வேண்டித் திருத்தொண்டர் புராணம் பாடுவித்த அநபாய சோழவேந்தனைச் சிறப்பித்தற் பொருட்டு, அவன் வழி முன்னோனாகிய மநுநீதிகண்ட சோழனது செங்கோன் மாட்சி தெரிக்கவே அதனைப் பாடி நூற்கு முதலிற் சேக்கிழார் சேர்த்திட்டாரெனின்; அநபாய சோழன் சிறப்பைத் திருத்தொண்டர் புராணத்தின்

இடையிடையே ஓதிச்செல்லுஞ் சேக்கிழார் அவ்வளவில் அமையாது, அவன்றன் முன்னோனான மநுநீதிச் சோழன் சிறப்பையும் எடுத்தோதல் வேண்டினாராயின் அதனை ஒரு தனி நூலாகவே செய்திருப்பா ரல்லது, சுந்தரமூர்த்தி நாயனாரது புராணமும் அதனோடியைபு பட்ட ஏனைத் திருத்தொண்டர் புராணமும் பாடுதற்கு மேற்கொண்ட தமது மேற்கோளை விடுத்து, அம்மநுநீதிச் சோழன் பெருமையைப் பாடுவாரல்லர். அற்றேல், மநுநீதிச் சோழன் புராணத்தைச் சேக்கிழார் ஒரு தனிநூலாகவே செய்தார்; மற்றுப் பின்னுள்ளோர் அதனைத் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்துவைத்தாரென்று கொள்ளாமோவெனின், அங்ஙனங் கொள்ளுதற்குச் சான்று

உண்டெனிற் கொள்க.

ஈண்டு யாங் கட்டுரைப்பது: ஆசிரியர் சேக்கிழார் ‘மநுநீதிச் சோழன் புராணத்தைத் திருத்தொண்டர் புராணத்தின் ஓர் உறுப்பாகக் கொண்டு பாடிற்றிலர் என்பதே யாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/322&oldid=1584083" இலிருந்து மீள்விக்கப்பட்டது