உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் 16

சிவபிரான் திருவடித் தொண்டில் உறைத்துநின்ற அடியார் தம் வரலாறுகளையே சேக்கிழார் சேக்கிழார் பாடப் புகுந்தாரல்லது, செங்கோன்முறை திறம்பாத அரசர் தம் வரலாறுகளையும் அவை போல்வன பிறவற்றையும் அவர் பாடப்புகுந்தார் அல்லர். அதனாலும், மநுநீதிச் சோழன் புராணம் இத் திருத்தொண்டர் புராணத்தின்கண் வருதற்கு ஏதோரியைபும் உடைத்தன் றென்பது தேற்றமாம். அற்றன்று, தனது செங்கோள் முறை வழுவாமைப் பொருட்டுத் தன் மகனைத் தேர்க்காலில் ஊர்ந்த மநுநீதிச் சோழனது மனவுறைப்புத் திருத்தொண்டர்தம் மனவுறைப்போடு ஒப்பதாகலின், அதனைத் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்துக் கூறுவது பொருத்தமேயா மெனின்; அங்ஙனமே, தனது செங்கோன் முறைமையை நிலைநிறுத்துதற் பொருட்டுத் தனது கையையும் வெட்டியெறிந்த பொற்கைப் பாண்டியன் முதலான பிறரும் உளராகலின், அவருடைய வரலாறுகளையும் திருத்தொண்டர்தம் வரலாறுகளோடு ஒருங்கு வைத்துப் பாடுதல்வேண்டும்; மற்றுச் சேக்கிழார் அங்ஙனம் பாடாமையானும், தாம் பாடுதற்கெடுத்த அரசர் சிலரையும் அவர்தம் செங்கோன்முறை பற்றி எடாது அவர் சிவபிரான் திருவடிக்கண் ஆற்றிய திருத்தொண்டின் உறைப்புப் பற்றியே எடுத்தோதுதலானும் மநுநீதிச் சோழன் புராணம் உரைப்பது சேக்கிழார் கருத்தன்றென்க.

இனித், திருக்கூட்டத்தவர்கள் திருவாரூர்க் கோயிலில் உள்ள தேவாசிரியன் என்னுந் திருக்காவணத்திற் கூடியிருக்கு மாறும், அவரைப் பணிதற்கு எழுந்த பேரன்பாற் சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை வேண்டுமாறும், அவரது வேண்டு கோளின் படியே சிவபெருமான் அத் திருக்கூட்டத்தார் சிறப்பினை அவர்க்கு நன்கெடுத்தோதி அவர்களைப் பாடுகவெனக் கட்டளையிட நாயனார் 'திருத்தொண்டத் தொகை' அருளிச் செய்தவாறும் ஆசிரியர் சேக்கிழார் தடுத்தாட்கொண்ட புராணத்'தில் 189 ஆம் செய்யுள் முதற்கொண்டு 201 ஆம் செய்யுள்வரையில் விளக்கிச் சொல்ல வேண்டுமளவுக்கு விளக்கிச் சொல்லியிருக்கின்றார். இவை களை இங்ஙனம் சொல்லியிருக்கையில், பெயர்த்தும் இத் திருக்கூட்டத்தார் சிறப்பை ஒரு தனிப் பகுதியாகப் பாடித் தடுத்தாட்கொண்ட புராணத்தின் முதலிற் சேர்த்தல் ‘கூறியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/323&oldid=1584084" இலிருந்து மீள்விக்கப்பட்டது