உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

299

கூறல்’ ‘மிகைபடக் கூறல்' என்னுங் குற்றங்கட்கிடனாமாதலின், இது சேக்கிழார் செய்து சேர்த்ததாகாது என்றாம். இவ் வெமதுகூற்றை மறுக்கப் புகுந்த எதிர்ப்பக்கத்தார், திருக்கூட்டச் சிறப்புத் தடுத்தாட் கொண்ட புராணத்தில் உண்டென்பதனை உடம்பட்டாராயினும், அச் சிறப்பு ஒரே செய்யுளாற் கூறப்பட்டிருத்தலோடு சிவபெருமான் அருளிச்செய்ததாகவும் அது காணப்படுதலின், சேக்கிழார் அதனை விரித்துப் பல செய்யுட்களாற் பாடி முன்னமைக்க வேண்டுவது இன்றியமை யாத தாயிற்று என்றனர். அடியார் சிறப்பினைச் சிவபிரானே எடுத்தோதியதாக அச் சிறப்பினைச் செய்யுளாற் பாடினவர் சேக்கிழாரே யல்லாமற் சிவபிரான் அல்லர். அச் செய்யுள்

வருமாறு,

“பெருமையால் தம்மை யொப்பார் பேணலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையுங் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று”.

இச் செய்யுளில் அடியார்களின் சிறப்பு மிக நன்றாக எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றது. இவ்வொரு செய்யுளிற் சொல்லப்பட்டுள்ள சிறப்புகட்குமேல் வேறு சொல்லத்தக்க பெருஞ்சிறப்பு யாதுளது? வெறும் பாட்டுகள் பத்து நூறு ஆயிரம் என்று பாடிவிடுவதுதானா சிறப்பு? சொல்லத்தக்க சிறப்புகள் செவ்வையாகச் சொல்லப் பட்டால் ஒரு செய்யுளே போதாதோ? நூறு வெள்ளிக்காசுக்கு வாங்குந் தங்கம் எவ்வளவு எடையுள்ளது? ஒரு தங்கக்கட்டி எடையளவிற் குறைந்ததாய் ருத்தல்பற்றி அதனியல்புங் குறைந்ததெனக் கருதுவாரு

ண்டோ?

அத் தங்கக் கட்டிக்கு ஈடாகக் கொடுக்கும் நூறு வெள்ளிக்காசும் எடையில் மிகுந்திருத்தலால், அவற்றின் இயல்பும் தங்கத்தைவிட மிகுந்த தெனக் கருதுவாருண்டோ?

ங்ஙனமே, பாட்டு ஒன்றாயிருந்தாலும் அதன்பொருட் சிறப்பை நோக்கல் வேண்டுமே யன்றி, ஒரு பாட்டுத்தானே யென்று குறைத்துப் பேசுதல் அறிஞர்க்குச் சால்பாகாது. மேலும், அடியவர் பெருமையைக் கூறும் இச் செய்யுட் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/324&oldid=1584085" இலிருந்து மீள்விக்கப்பட்டது