உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

❖ LDMMLDMOELD -16 →

சிவபெருமானே ஓதியதாகப் பெறப்படுதலின் இதற்கு மேலும் சிறப்புக்கூறச் சேக்கிழார் துணிந்தாரெனல் ஆகாது. இச் செய்யுளில் உள்ள பொருளையே, திருக்கூட்டச் சிறப்பின்கண் அடியார் பெருமை கூறுஞ் செய்யுட்களும் புகலுதலின், இவை வேறோர் அன்பராற் செய்து சேர்க்கப் பட்டன வாகுமல்லாற் சேக்கிழாராற் செய்யப்பட்டனவாகா. “பெருமையால் தம்மை யொப்பார்” என்னுஞ் செய்யுளில் அடியார் பெருமை சாலவும் நன்றாய்ச் சொல்லப்பட்டிருத்தல் சிறிதறிவுடையார்க்கும் விளங்கக் கிடந்ததாகலின்,யாம் இதனை யெடுத்துக் காட்டியது கற்போருள்ளத்தை மாறுபடுத்துதற் கன்றெனவும், மற்று அவரதுள்ளத்தைத் தெளிவுபடுத்துதற்கே ஆ மெனவும்

எதிர்ப்பக்கத்தவர் உணரக்கடவராக.

இனித், 'திருமலைச்சருக்கம்' எனப் பெயர்வைத்து, அப்பெயர்க்கு ஒவ்வாத ‘சோழ நாட்டுச் சிறப்பு' 'திருவாரூர்ச் சிறப்பு’ ‘மநுநீதிகண்ட சோழன் வரலாறு’ திருக்கூட்டச் சிறப்பு’ முதலியவற்றை அதன்கண் வைத்துரைத்தல் ‘மாறுகொளக் கூறல்' என்னுங் குற்றமாய் முடிதலின், அத் திருமலைச் சருக்கமும், அதன்கண் உள்ள ஏனை நான்கும் ஆசிரியர் சேக்கிழார் செய்தன அல்ல வென்பது ஒருதலை. இச் சருக்கம் உமாபதி சிவனார் காலத்திற்கு முன்னரே பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டமையின், அவர் இதனையும் உடன்சேர்த்துப் பெரிய புராணத்தின்கண் உள்ள சருக்கங்கள் பதின்மூன்றென எண்ணினார். உமாபதி சிவனார்க்குப் பிற்காலத்தே பெரிய புராணத்திற் பிறராற் சேர்க்கப்பட்ட முப்பத்து மூன்று செய்யுட்கள் உளவாயினாற் போலவே, அவர் காலத்துக்கு முன்னும் மேற் காட்டியவாறு பல செய்யுட்கள் கலந்தன வென்க.

யை

இனிப், பாயிரத்திற்கும் நூலுக்கும் இடை டையே பில்லாத வற்றைக் கூறுதல் பண்டை நல்லிசைப்புலவர் தமிழ்நூல் வழக்கு அன்மையின், அவ் வழக்கே பற்றித் திருத்தொண்டர் புராணம் இயற்றுவான் புகுந்த ஆசிரியர் சேக்கிழார் “தெய்வ வணக்கமுஞ் செயப்படுபொருளும், எய்த வுரைப்பதாகிய” பாயிரம் உரைத்தபின், இடையீடின்றித் திருத்தொண்டர் புராணந் துவக்கினாரென்றலே வாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/325&oldid=1584086" இலிருந்து மீள்விக்கப்பட்டது