உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

கருத்தோவியம்

301

புடைத்து. இப் பாயிரத்தின் கண் முதன்மூன்று செய்யுட்களில் தெய்வவணக்கமும், நான்காஞ் செய்யுளில் திருத்தொண்ட வாழ்த்தும், ஐந்து ஆறு ஏழாஞ் செய்யுட்களில் அவை யடக்கமும், எட்டாஞ் செய்யுளில் தம்மை இந்நூல் பாடுவித்த அநபாய சோழன் சிறப்பும் அவன்றன் அவையினர்க்கு அடக்கமும், ஒன்பதாஞ் செய்யுளில் இந் நூல் தாம் பாடுதற்கு முதலெடுத்துக் கொடுத்த திருவருளியக்கமும், பத்தாஞ் செய்யுளில் இந் நூற் பெயரும் கூறப்பட்டமை காண்க. அற்றேல், இச் செய்யுட்கள் பத்தும் தெய்வவணக்கம் செயப்படு பொருள் என்பவற்றோடு வேறு பிறவுங் கூறுதலென்னையெனின்; திருத்தொண்டர் பெருமையும் அவையடக்கமுங் கூறுஞ் செய்யுட்களும் அடியார்க்கும் அவையத்தார்க்கும் வணக்கங் கூறுவனவேயா யிருத்தலின் அவையுந் தெய்வவணக்கத்தின் பாற் படுமென்க; இறைவனருள் வழிப்பட்டாரும், இறைவனருட் டிறங்களை ஆயுங் கற்றார் தொகையுந் தெய்வத்தோடு ஒப்ப ராகலின் அதுபற்றி ஐயுறவென்னையென விடுக்க.

இன்னுந், 'திருக்கூட்டச் சிறப்பு' என்பதன்கண் உள்ள செய்யுட்களை நுனித்தாராயுங்கால், இவற்றுள் முதல் எட்டுச் செய்யுட்கள், பாயிரத்தின்கண் உள்ள ‘திருக்கூட்டப் புகழ்ச்சி’ யையும், பின் இரண்டு செய்யுட்கள் 'அவையடக்கத்தின்’ முதலையும், ஈற்றின் நின்ற “இந்த மாதவர்” என்னுஞ் செய்யுள் பாயிரத்தில் நூற்பெயர் கூறுஞ் செய்யுளையும் அடுத்து நிற்றற் குரியன வென்பது புலனாம். 'திருமலைச்சிறப்பின்' கண் உள்ள கையின் மான் மழுவர்' என்னுஞ் செய்யுள், சேக்கிழாராற் றிருத்தொண்டர் புராணம் பாடுவித்த அநபாய சோழவேந்தன் மாட்சி கூறுதலின், அது 'வெள்ளானைச் சருக்கத்தில், 'யானை மேல் கொண்டு' என்னுஞ் செய்யுளின் பின்னே நிற்கற் பாலதாம். சேக்கிழாராற் செய்யப்பட்டுப் பாயிரத்திலும் நூலின் ஈற்றிலும் நின்ற இச் செய்யுட்கள் சிலவற்றைப் பின்வந்தோர் தாம்பாடிய 'திருமலைச்சருக்கத்’தின் இடை யிடையே கோத்தாரெனக் கோடலும் ஒன்றும். இங்ஙனமே 'நாட்டுச்சிறப்பின்' கண் உள்ள செய்யுட்களும், சோழநாட்டு வளங் கூறும் அவ்வந் நாயன்மார் புராணங்களினின்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/326&oldid=1584087" இலிருந்து மீள்விக்கப்பட்டது