உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மறைமலையம் 16

பிரித்தெடுத்துச் சேர்த்து ஒரு படலமாகப் பின்வந்தோரால் வைக்கப்பட்டனவாயு மிருக்கலாம். 'திருமலைச் சிறப்பு’ திருவாரூர்ச் சிறப்பின்' கண் உள்ள செய்யுட்களை வ்வாறு

கோடல் ஆகாமையின் இவை பின் வந்தோராற் செய்து சேர்க்கப் பட்டமை தேற்றமாம்.

எங்ஙனமாயினும், ஆசிரியர் சேக்கிழார் ‘திருத் தாண்டர் புராணம்' பாடிய காலத்துப், பாயிரத்திற்கும் நூலிற்கும் இடையே ஒருவாற்றானும் இயைபில்லாத இந் நான் கு படலங்களைக் காண் திருமலைச்சருக்கம்’ வைக்கப்பட வில்லையென்பதூஉம்; சேக்கிழார்க்குப் பின்னும் உமாபதி சிவனார்க்கு முன்னும் வந்த எவரோ சிலர்இப் படலங்கள் நான்கனையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து விட்டன ரென்பதூஉம், தமிழ்நூற் பொருள்களை வடமொழி யிலிருந்து வந்தனவாகக் கூறுதற்கு விழைந்த ஒரு பார்ப்பன ரால் ‘திருமலைச் சிறப்பும்’ வடமொழியிலுள்ள மனுநூலுக்கு ஏற்றங்கூற ஆவலுற்ற மற்றொரு பார்ப்பனரால் மநுநீதிகண் புராணம் என்னும் ‘திருவாரூர்ச் சிறப்பும். பின்றைத் தமிழ் இலக்கியங்கள் சிலவற்றைப் பார்த்து நாட்டுவளங்கூற விரும்பிய ஒரு தமிழ்ப்புலவரால் 'நாட்டுச் சிறப்பும்' அடியார் பெருமையைத் தனித்தொரு படலமாகக் காண அவாவிய ஒரு அன்பரால் திருக்கூட்டச் சிறப்பும் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சேர்க்கப் பட்டனவாதல் வேண்டுமென்பதூஉம்; பார்ப்பனர் ருவரும் பெரும்பாலுந் தாமே பாடிய செய்யுட்களையும் ஏனையிருவருஞ் சேக்கிழார் ஏனையிடங்களிற் பாடிய செய்யுட்களையும் அமைத்துக் கட்டிவிட்ட ‘திருமலைச் சருக்கம்' உமாபதி சிவனார்க்கு முன்னரே ஏட்டுச் சுவடிகளிற் கலந்துவிட்டமையின் இந்நாளிற் போல அச்சுப் புத்தகங்கள் இல்லா அந்நாளில் அதனையும் உடன் சேர்த்துச் சருக்கம் பதின்மூன்றென எண்ணிய உமாபதி சிவனார் கணக்கின்படி சேக்கிழார் பாடியனவும் பதின்மூன்று சருக்கங்களேயா மெனக் கோடல் வழுமாமென்பதூஉம்; இடையிடையே பின்னுள்ளோ ராற் செய்து சேர்க்கப்பட்ட செய்யுட்கள் 'பெரிய புராணத்தின்’ கண் உளவென்பதற்கு, எம்மை மறுப்பான் புகுந்த எதிர்ப் பக்கத்தவரே தம்மிடம் உள்ளதும் எழுபது ஆண்டு கட்கு முற்பட்டதுமாகிய ஏட்டுச் சுவடியில் இல்லாத இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/327&oldid=1584088" இலிருந்து மீள்விக்கப்பட்டது