உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

❖ LDM MLDMOELD -17 ❖

நமது வயிற்றுப் பிழைப்புக்காகவும், வேறு சில காரணங் களுக்காகவும் ஆங்கிலம் ஸமஸ்கிருதம் முதலிய மற்ற மொழிகளை நாம் வருந்திக் கற்கவேண்டுவது கட்டாயமாய்த் தோன்றினாலும், இவற்றின் பொருட்டு நமது இனிய செந்தமிழை மறப்பதும் அதனைப் பயிற்சி செய்யாமற் கைவிட்டிருப்பது நமதுயிரையே நாம் அழிப்பதாய் முடியும். அழகுமிக்க செந்தாமரை மலரின் செந்நிறத்தையும் அதில் துளும்பி வழியும் கொழுந்தேனையும் அகற்றி விட்டு, அவற்றிற்கு மாறாக அதற்கு மஞ்சள் நிறத்தை ஊட்டிச் செங்கழு நீரர் மணத்தைப் புகுத்திக் கற்கண்டின் நீரைச் சொரிந்து வைப்பேன் என்று ஒருவன் அதன் இயற்கையை மாற்றப் புகுந்தால் அது கைக்கூடாமல் அத்தாமரைமலர் அழிந்துபோவது போல, மற்ற மொழிகளும் இனிய சொல்லுஞ் சிறந்த உயர்ந்த பயனும் உடையனவாய் இருந்தாலும், தமிழின் நிறமும் அதன் பொருளின் மணமும் அதன் சுவையின் தேனும் இயல்பாகப் பொருந்தப் பெற்ற நமதுயிரை அவ்வியற்கை யினின்றும் மாற்றி, அம்மற்ற மொழிகளின் தன்மையை அதற்கு ஏற்றினால் அது தன்றன்மை இழந்து அழிந்து போகும் தமிழ் முதலான மொழிகளுள் ஒன்றையேனும் அல்லது இரண்டு மூன்றை யேனுந் தமது குழந்தைப் பருவந் தொட்டுப் பேசி வருபவர், தாம் பேசும் அவ் இயற்கை மொழிகளையே மேலும் மேலும் கற்றுத் தமது அறிவை வளப்படுத்தாமல், அவற்றைக் கைவிட்டு முற்றும் மாறாக புதியவான ஆங்கிலம் ஆரியம் முதலான மொழி களையே பழகி வருவராயின் அவர் நீண்ட நாள் உயிர் வாழார். இதனாலான்றோ, தமிழைக் கைவிட்டு ஆங்கிலம் ஆரியம் முதலியவற்றையே கற்றுப்பழகும் நம் நாட்டவர் பலர் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகட்குட் பலவகை நோய்களாற் பீடிக்கப்பட்டு மாய்ந்து போகின்றனர்! தன் இயற்கையில் வலுப்பட்டு நில்லாத ஒரு தூணின்மேற் பெருஞ் சுமைகளை ஏற்றினால் அவற்றைத் தாங்காமல் முறிந்து விழுவது போலத், தமக்குரிய மொழியைக் கற்று வலிவுபெறாத ஒருவனது அறிவின் மேல் வேறு மொழிகளை ஏற்றினால் அவற்றைத் தாங்க மாட்டாமல் அவை பழுதுபட்டுப் போகும். தாய்ப்பால் நிரம்ப வுண்டு சார்ந்த பிள்ளை ஆண்டு முதிர முதிர அரிய பெரிய முயற்சிகளை யெல்லாம் எளிதிற் செய்து நீண்டநாள் உயிர் வாழ்தல் போலத், தமிழ்ப் பால் உண்டு வளர்ந்தவர் எத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/101&oldid=1584307" இலிருந்து மீள்விக்கப்பட்டது