உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

77

மொழிகளையும் வருத்தமின்றிக் கற்று நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பர். தமிழோடு மற்ற மொழிகளையுங் கற்றவர் நீண்டகாலம் உயிர் பிழைத்திருத்தலுந், தமிழை விட்டு அயல்மொழிகளை மட்டும் பயில்கின்றவர் விரைவில் உயிர் மாளுதலும் இயற்கையாய் நிகழ்தலைக் காண்பவர்களுக்கு நாம்கூறும் இவ்வுண்மை நன்கு விளங்கும்.

அறிவிற் சிறந்தவரான ஆங்கில நன்மக்கள் தமக்கு இயற்கையில் உரிய ஆங்கிலமொழியை நன்றாகக் கற்ற பிறகுதான் வேறு மொழிகளைக் கற்கின்றார்கள்; தமது மொழியைக் கல்லாமல் வேறுமொழிகளைச் சிறிதுங் கற்கவே மாட்டார்கள். இப்படிப்பட்ட உயர்ந்த பழக்கம் அவர்களிடத் தில் இருப்பதனாலேதான் அவர்கள் தமது மொழியில் நிகரற்ற புலமையுடையராய் இருப்பதோடு, தாம் கற்கும் வேறு மொழி களிலும் வல்லவராய்ச் சிறந்து விளங்கி நீண்டநாள் உயிர் வாழ்ந்து உலகத்திற்கு அறிவிறந்த நன்மைகளை யெல்லாம் வி ளைவித்து வருகின்றார்கள். நம்மவர்களோ தமக்குரிய செந்தமிழ் மொழியைச் சிறிதுங் கல்லாமலுஞ், சிறிதுகற்றாலுந் தமிழ்நூற் பயிற்சி நன்றாக நிரம்பாமலும், வயிற்றுப் பிழைப்பிற்குரிய ஆங்கில முதலான அயல்மொழிகளையே மிகுந்த பெரும் பொருட் செலவினைச் செய்து, பல ஆண்டுகள் அல்லும், பகலும் உழைத்துக் கற்றுக் கொள்கின்றார்கள். தென்னங்கன்றைப் பெயர்த்து பனிமிகுந்த ஆங்கில நாட்டில் வைத்தால் அஃது ஆங்கிலம் போல வளராமல் அழிந்து போவது போல, நமது செந்தமிழை விட்டு மற்ற மொழி களையே தம் காலமெல்லாங் கற்று அவர் அதனால் வலிவிழந்து மெலிந்து விரைவில் உயிர் துறக்கின்றனர்! ஐயோ! வயிற்றுப் பிழைப்புக்கென்று முழுதுங்கற்ற மற்றமொழி அவரது பிழைப்புக்கே இடையூறு விளைத்து வருதலை நம்மவர் அறி யாமல் வரவு தமதுவாழ்வில் அருகிப்போவது நினைக்குந் தோறும் தூயதுள்ளத்தை நீராய் உருக்குகின்றது! இந்நிலைமை சிறிதாயினுங் கருதிப் பார்ப்பவர்கள் நமது தமிழ்மொழிப் பயிற்சி நம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத மருந்தா மென்பதை உணராமற் போவரோ!

இது மட்டுமோ, இத் தென்னாட்டின்கண் தமிழ் மொழியானது இருநூற்று மூன்று இலட்சத்து தொண்ணூற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/102&oldid=1584308" இலிருந்து மீள்விக்கப்பட்டது