உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் -17

பாருங்கள்! இவை அவற்றைச் காட்டிலுஞ் சொல்லுதற்கு இன்னும் எத்தனை எளியனவாய் இனியனவாய் இருக்கின்றன! இங்ஙனமன்றி ஆரியம் முதலான மற்ற மொழிகளின் இலக்க ணங்கள் இயற் கைக்குமாறாய் .இருத்தலுங், தமிழ் இலக்கணம் ஒன்றுமே இயற் கைக்குப் பொருத்தமாய் இருத்தலும் யாம் எழுதிய ஞான சாகரமுதற்பதுமத்திலும், பண்டைக்காலத் தமிழர் ஆரியர் என்னும் நூலிலுங் கண்டுகொள்க. இங்கே அவை யெல்லாம் விரித்துரைப்பதற்கு இடமில்லை. அது நிற்க,

இனி மொழியின் அமைப்பையும், மக்களியற்கை உலக இயற்கைகளையுங் திறம்பட விரித்துரைத்த தொல்காப்பியம் போன்ற மிகப்பழைய நூலை நமது செந்தமிழ்இன்றி வேறு மொழிகளிற் காணல் இயலுமோ? அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் முற்றும் எடுத்து விளக்கிய திருக்குறள், நாலடியார் போன்ற அரும்பெரு நூ ல்களை நம் செந்தமிழ் மொழியாம் தவிர வேறெந்த மொழியேனும் உடைய தா மோ? சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பெரும் பழந்தமிழ்க் காப்பியங்களோடு ஒத்தவை எம்மொழியிலேனும் உளதா?. உலகவியற்கை பிறழாது பாடிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலான பழைய தமிழ்ப்பாட்டுக்களுக்கு நிகரானவை வேறெந்த மொழியிலேனும் எடுத்துக்காட்ட இயலுமோ? திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை தேவாரம், பெரியபுராணம் என்னுந் தெய்வத் தமிழ்நூல்கள், கன்னெஞ்சமுங் கரைந்துருகி எத்திறத்தவனும் இறைவன் அருட் பெருக்கில்அமிழ்ந்தி இன்பவுருவாய் நிற்குமாறு செய்தல் போல், வேறு எந்தமொழியில் உள்ள எந்நூலேனும் செய்தல் கண்ட துண்டோ? முடிவாய்த் தெரியவேண்டும் மெய்ப் பொ ள்களை தெளித்துச்கூறி முடிவுகட்டிய சிவஞான போதம் சிவஞான சித்தி போன்ற மெய்ந்நூல்களும், அவற்றின் மெய்யுரை விரித்த சிவஞானமுனிவரின் நுண்ணுரை போன்ற உரைநூல்களுந் தமிழிலன்றி வேறெந்த மொழியிலேனுங் காணப்படுவதுண் டோ? இந்நூற் பொருளென்னுந் தீம்பாலை நமதுயிரெல்லாந் தித்திக்கக் குழைந்தூட்டும் நம் தமிழ்த்தாயை மறவாது பேணும் பெரும்பேற்றை நம் தமிழ்மக்கள் எல்லாரும் பெற்றுச் சிறந்திடுவாராக!

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/105&oldid=1584311" இலிருந்து மீள்விக்கப்பட்டது