உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

11. தமிழிற் பிறமொழிக் கலப்பு

இந் நிலவுலகிற் பழமைக் காலந்தொட்டு இன்று காறும் வழங்கிவரும் மொழி தமிழ் ஒன்றேயாம் என்பதை முன்னர் ஒருமுறை விளக்கிக் காட்டினாம். மற்றை மொழிகளிற் சில பன்னூறாண்டுகட்கு முன்னே இறந்து போயின. L பல சின்னூறாண்டுகளாகவே தோன்றி நடைபெறுகின்றன. சில பழமையாகி இறந்தன. பல புதுமையுற்றுப் பிறந்தன. பழமையும் புதுமையும் ஒருங்குடைய ஒருமொழியை அவற்றினிடத்தே காணல் இயலாது. மற்றுத் தமிழ் மொழியோ பழமைக்குப் பழைமையுமாய், புதுமைக்குப் புதுமையுமாய்த் தன் இயல்பு பிறழாது, ஏறக் குறைய முந்நூறு நூறாயிரம் மக்களினிடையே உலாவி வருகின்றது. இங்ஙனம் இது பண்டு து பண்டு தொட்டே உயிரோடு விளங்கி வருதலின், முற்காலத்தில் வழங்கிய மொழிகளின் சொற்கள் சிலவும் பிற்காலத்தில் நடைபெறும் மொழிகளின் சொற்கள் சிலவும் இதன்கண்ணே கலந்து காணப்படுதல் இயற்கையேயாம். யாங்ஙனமெனின், நீண்டகாலம் உயிரோடிருக்கும் ஒருவன் பல நாடுகளிலும் சென்று முயலுந் தொழின் முயற்சியும் மிகுந்த சுறுசுறுப்பும் உடையனாயிருந்தால், அவன் தனதிளமைக் காலத்தில் தன்னோடிருந்து இறந்து போனவர் வைத்த பொருள்களிற் சிலவற்றையுந், தனது பிற்காலத்தில் தன்னோடிருப்பவர் வழங்கும் பண்டங்களில் சிலவற்றையுங் கையாள நேர்வது போல, உயிரொடு சுறுசுறுப்பாய் உலவிவருந் தமிழ் மொழியுந் தான் வழங்கிய பண்டைநாளில் வழங்கியிருந்த ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளின் சில சொற்களையும், இஞ்ஞான்று தன்னொடு சேர்ந்துலாவும் ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளின் சில சொற்களையுந் தான் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றது. இன்னும் இதனை விளக்கிக் காட்டல் வேண்டின், உயர்ந்த மலை முகட்டில் என்றும் நீர் ஊறும் ஒரு

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/106&oldid=1584312" இலிருந்து மீள்விக்கப்பட்டது