உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

❖ LDMMLDMOшLD -17 →

சுனையிலிருந்து இடையறாது ஓடிவரும் ஓர் அருவி நீருக்குத் தமிழ் மொழியை ஒப்பிட்டுச் சொல்லலாம். இனி இவ்வருவி நீர் ஓடிவரும் வழியின் இடையிடையே சுரப்பின்றிச் சேறும் நீருமாய் நிற்குங் குளங்குட்டை கட்கு வழக்கில் இல்லாத ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளையும், இன்னும் அவ் வழியின் கீழே இருபாலும் ஆங்காங்குப் புதிது தோன்றித் தனித் தனியே ஓடும் யாறுகளுக்கு ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளையும், இவ் யாறுகளிலிருந்து பிரிந்து வந்து அவ்வருவியொடு கலக்குஞ் சிறு சிறு கால்களின் நீருக்கு அம்மொழிகளிலிருந்து தமிழில் வந்து கலக்குஞ் சில சொற்களையும் ஒப்பாகச் சொல்லலாம். பன்னெடுங் காலமாக வறளாது ஓடி வருந் தமிழருவியானது தான் வரும் வழியிலுள்ள ஆரியம் முதலான பழைய குளங் கூவல்களிற் சென்று அவற்றின் சொற்களாகிய நீரையுந் தன்னொடு கலப்பித்துப் புதியவாக்கிப், பின்னும் இடை யிடையே தன் கண் வந்து கலக்கும் பின்றைக் காலத்துச் சொற்களாகிய சிறு கால்களின் நீரையுந் தன்னுரு வாக்கித் தன்னை வழங்கும் மக்கட்கும் பெரிதும் பயன்பட்டு வருகின்றது.

இனி, ஒரு மொழியின் சொற்கள் மற்றொரு மொழியில் வந்து கலக்கவேண்டுவதுதான் என்னை யென்று வினவினால், ஒரு மொழியினைப் பேசும் மக்கள் தம் நாட்டையுந் தம் இனத்தாரையும் விட்டு நீங்காமல் இருக்கும் வரையில், அவர் தாம் இருக்கும் நாட்டின் கண்ணே பிறமொழி பேசும் பிறநாட்டார் வந்து சேராதிருக்கும் வரையில், அவர் பேசும் மொழியில் அயல் மொழிச் சொற்கள் வந்து கலப்பதற்கு இடமேயில்லை. அங்ஙனமின்றி அவர் பல நாடுகளையும் அந் நாடுகளிலுள்ள பல திறப்பட்ட மக்களையும் போய்க் கண்டும், அவர் நாட்டுப் பண்டங்களைத் தாம் விலைகொண்டும், தம் நாட்டுப் பண்டங்களை அவர்க்கு விற்றும், அவர்தம் வழக்க வாழுக்கங்கள் சிலவற்றைத் தாங் கைப்பற்றியும், தமக்குரிய சிலவற்றை அவர் கைப்பற்றுமாறு தந்தும், ஒருவரது நாகரிகத்தை ஒருவர் பின்பற்றியும் ஒழுகும் உயர்ந்த அறிவும் உயர்ந்த நடையும் வாய்ந்தவர்களா யிருந்தால், அவர் பேசும் மொழியில் மற்ற மொழிச் சொற்கள் புகுந்து கலவாமல் இரா. ஆகவே, இம் முறையால் நோக்குமிடத்துப் பல வகையாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/107&oldid=1584313" இலிருந்து மீள்விக்கப்பட்டது