உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

83

உயர்ந்த நாகரிக வாழ்க்கையுடையராய் விளங்கிய தமிழ் மக்கள் வழங்கிவந்த தமிழிற் பிறமொழிச் சொற்கள் சில வந்து கலக்கலானது இயற்கையேயா மென்பது உணரப்படும்.

அங்ஙனமாயிற், பழைய காலத்திற் றமிழ் மக்கள் அயல் நாட்டவரொடு சென்று அளவளாவும் நாகரிக முதிர்ச்சி உடையவரா யிருந்தா ரென்பதற்குச் சான்று என்னை யெனின், இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பியம் என்னும் நூல் ஒன்றுமே ஒரு பெருஞ் சான்றாமென்க. அருமை பெருமையிற் சிறந்த இவ்வொரு நூலை ஒரு சிறிது உற்று நோக்குவார்க்கும், இந்நூல் எவ்வளவு பழமையுடையதாய் இருக்க வேண்டுமென்பதும், மிகப் பழைய நாளிலே இவ் வுயர்ந்த நூலை எழுதிய ஆசிரியரோடு ஒருங்கிருந்த தமிழ் முதுமக்கள் எத்துணைச் சிறந்த அறிவும் நாகரிகமும் வாய்ந்தவராயிருந்திருக்கவேண்டு மென்பதும் அவர் உள்ளத்திற் பதியாமற்போகா. இந் நூலின்கண் உள்ள, 'முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை' என்னுஞ் சூத்திரத்தாற் பண்டைத் தமிழ் மக்கள் பொருள் ஈட்டும் பொருட்டுத் தம் மனைவி மக்களையும் நாட்டையும் விட்டுக் கடல் வழியே மரக் கலன்களில் ஏறித் தொலைவான நாடு நகரங்களிற் சென்று சேர்வரென்பது பெறப்படுகின்றது. தமிழர்கள் கடல் தாண்டிச் சென்று வேற்று நாடுகளிற் போய்ப் பொருள் முயற்சி செய்தது போலவே, வேற்று நாட்டவரும் தமிழ் நாட்டிற்போந்து பல

66

முயற்சிகளை நடத்தினாரென்பது ஈபுரு மொழியில்

எழுதப்பட்ட பழைய விவிலிய நூலினால் இனிது விளங்கு கின்றதன்றோ? காவிரிப்பூம் பட்டினத்திற் கரிகாற்சோழன் என்னும் வேந்தர் பெருமான் அரசாண்டபோது, பலவேறு மொழிகள் வழங்கிய பலவேறு தேயத்தாரும் அந்நகரத் தினிடத்தே போன்று கலந்திருந்து பல தொழின் முயற்சி நடத்தினமையும், கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்து குதிரைகள் வந்தமையும், இமயம் மேரு முதலிய மலை களிலிருந்து பொன்னும் மணியும், மேற்கணவாய் மலை களிலிருந்து சந்தனக்கட்டை அகிற்கட்டைகளுந், தென் கடலிலிருந்து முத்துகளுங், கீழ்கடலிலிருந்து பவழங்களுங், கங்கை யாற்றிலிருந்து அதன் பொருள்களும், இலங்கை பர்மா என்னும் நாடுகளிலிருந்து அவற்றின் விளை பொருள்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/108&oldid=1584314" இலிருந்து மீள்விக்கப்பட்டது