உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

95

தெருட்டி யிருக்கின்றனர். இத்தகைய நிலையில் உள்ள மக்கள் ஒருவரை யொருவர், “அறியாமை யுடையர்" என்று இகழ்ந்து பேசுவதினுந் தகாதது யாது உளது! தாந்தாம் உண்மையெனக் கண்ட வைகளைத் தக்க சான்றுகள் கொண்டு விளக்கிப் போதலே அறிவுடையார்க்குக் கடனாவதாம்; தமக்கு மாறான கொள்கை யுடையாரை இகழ்ந்து பேசுதல் அவர் தமக்குச் சிறிதும் முறையன்றாம். அது நிற்க.

இனி, நமது செந்தமிழ் மொழியில் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமல், நம்மாற் கூடியவரையில் முயன்று அதனைத் தூயதாக வழங்கல் வேண்டும். ஆனால், ஒரு சாரார், உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் மாறுந் தன்மையவாகலின் அவற்றுள் ஒன்றாகிய மொழியும் மாறுதல் அடைதல் இயற்கையேயாம் என்றும், அதனால் தமிழும் பலவேறு மொழிக்கலப்புற்று மாறுதல் அடைதல் நன்றேயாமென்றும் வரைந்திருக்கின்றார். இனி, ‘மாறுதல்' என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன்றன்மை திரிந்து மற்றொன்று ஆதலா? அல்லது அது தன் இயல்புக்கு ஏலாதவற்றோடு கலக்கப் பெற்றுத் தன் நிலைகுலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின், இம்மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம். முதலிற் சொன்ன பொருளின் படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒருவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுருவு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப்பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன. இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முடம்பின் நிலை குலைந்து மாறி விரைவில் அழிந்து போகின்றன. இனி, மூன்றாவது சொன்ன பொருளின் படி, உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால் தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன; மக்கள் தமக்கேற்ற உணவுகளை ள உட்கொண்டும் சைவான இடங்களிற் குடியிருந்தும், வரவரத் தம்முடம்பும் உணர்வும் மாறிமாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/120&oldid=1584328" இலிருந்து மீள்விக்கப்பட்டது